குழந்தைகளை வன்முறைக்கு தூண்டும் வகையில் ஆயுதங்கள்: ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு
குழந்தைகளிடம் வன்முறையை தூண்டி விடும் வகையில் ஆயுதங்கள் மற்றும் வடிவமைக்கப்பட்ட விளையாட்டு பொருட்கள் ஹமாஸ் தளபதியின் வீட்டின் அருகே கிடைத்து உள்ளன என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.காசாவின் கான் யூனிஸ் பகுதியில் உள்ள பள்ளியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர்.
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் 3 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். ஹமாஸ் தளபதி ஒருவரின் வீடு அருகே, எறிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிக்க கூடிய தோட்டாக்கள் மற்றும் கவச உடைகள் குவியலாக கிடைத்தன.அந்த ஆயுதங்களில் சில, குழந்தைகளின் படுக்கையறையின் உள்ளே காணப்பட்டன.
பொம்மைகள் மற்றும் விளையாட்டு பொருட்களுக்கு அடுத்து அவை கிடந்தன. குழந்தைகளிடம் வன்முறையை தூண்டி விடும் வகையில் ஆயுதங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் ஹமாஸ் தளபதியின் வீட்டில் இருந்து கிடைத்து உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.