Lord Venus: சுக்கிரன் கொட்டும் அதிர்ஷ்டம் இந்த ராசிக்கு தான்

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் ஆடம்பரம், செல்வம், செழிப்பு, காதல், மகிழ்ச்சி, திருமண வாழ்க்கை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்குகிறார். சுக்கிர பகவான் 30 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுகிறார்.

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். சுக்கிர பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சுக்கிர பகவான் வரும் டிசம்பர் 25ஆம் தேதி அன்று தனது இடத்தை மாற்றுகிறார். இதுவரை துலாம் ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

சுக்கிர பகவானை அதிபதியாகக் கொண்ட உங்களுக்கு திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் ராசியில் ஏழாம் வீட்டில் சஞ்சாரம் செய்ய போகிறார். நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குடும்ப உறவுடன் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகளில் இருந்த நிலுவைகள் நிவர்த்தி அடையும்.

மகர ராசி

சுக்கிர பகவான் உங்கள் ராசியில் இரண்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாக்கும். சிக்கிக் கிடந்த பணங்கள் உங்களை தேடி வரும். 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு லாபகர ஆண்டாக அமையும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

துலாம் ராசி

உங்கள் ராசிகள் இரண்டாம் வீட்டில் சுக்கிர பகவான் செஞ்சாரம் செய்ய உள்ளார் எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் பணவரவில் எந்த குறையும் இருக்காது உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய முயற்சிகள் நன்மைகளில் முடியும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *