Friendship Rasis: இயற்கையிலேயே நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ராசிகள் இவர்கள்தான்
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். கிரகங்களின் இடமாற்றத்திற்கு ஏற்ப 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து உயிர்களும் வெவ்வேறு குணாதிசயங்களை கொண்டதாகும்.
தனிப்பட்ட குணாதிசயத்தை ஒவ்வொரு உயிரினமும் கொண்டிருந்தாலும். சில உயிர்கள் ஒத்த அமைப்போடு செயல்படுவார். அதேபோல 12 ராசிக்காரர்களுக்கும் நவகிரகங்களில் ஏதோ ஒரு கிரகம் அதிபதியாக இருக்கும்.
வெவ்வேறு விதமாக சிந்தித்து செயல்பட்டாலும் தனது அதிபதி கிரகத்தின் செயலுக்கு ஏற்ப சில ராசிக்காரர்கள் சிறப்பான குணாதிசயத்தை பெற்றிருப்பார்கள். அந்த வகையில் இயற்கையிலேயே நட்பு மனப்பான்மை அதிகம் கொண்ட ராசிகளை இங்கே காண்போம்.
மேஷ ராசி
இயற்கையாகவே மக்களை ஈர்க்கக்கூடிய திறன் கொண்டவர்கள் நீங்கள். அந்த ஆற்றல் மற்றும் வெளிப்படை தன்மை எப்போதும் உங்களிடம் இருக்கும் அதன் காரணமாக மற்றவர்கள் உங்கள் மீது ஈர்க்கப்படுவார்கள். உங்களுடைய இயல்பான அன்பு மற்றவர்களிடத்தில் மிகப்பெரிய நட்புறவை ஏற்படுத்துகிறது. அதேசமயம் மற்றவர்கள் மீது நீங்கள் வைக்கும் விசுவாசம் மிக உறுதியான நட்பு வட்டாரத்தை உருவாக்குகிறது.
மிதுன ராசி
இயற்கையாகவே பறந்து செல்லும் மனப்பான்மை கொண்டவர்கள் நீங்கள் மற்றவர்கள் வட்டாரத்தில் சிரமமின்றி நுழைவதில் நீங்கள் வல்லவர்கள் உங்கள் புத்திசாலித்தனத்தால் எளிதாக தொடர்பு கொண்டு சிறந்த தோழர்களை பெற்று சிறந்த தோழனாக விளங்குவீர்கள். நல்ல நட்பை நீங்கள் வெகுவாக மதித்து நல்ல நண்பனாக இருப்பீர்கள். நீங்கள் எப்போதும் மற்றவர்களுக்கு சிறந்த நண்பனாக இருப்பீர்கள்.
துலாம் ராசி
சுக்கிர பகவான் உங்கள் ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார் அதிகம் அமைதியை விரும்பக் கூடிய ராசிக்காரர்களாக நீங்கள் விளங்கி வருகிறீர்கள். உள்ளார்ந்த அன்பு கொண்ட உறவுகளுக்காக எதையும் இறங்கி செய்யக் கூடிய நட்போடு செயல்படுவீர்கள். உங்கள் நேர்மை மற்றவர்களிடத்தில் நம்பிக்கையை உண்டாக்கும். அதேசமயம் மற்றவர்களுக்கும் நம்பிக்கையோடு நேர்மையாக செயல்படுவீர்கள்.