நாவில் எச்சில் ஊறும் தேங்காய் போலி: இப்படி செய்தால் செம்ம ருசியா இருக்கும்
செம்ம சுவையான தேங்காய் போலி, இப்பட்டி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
1 கப் மைதா மாவு
கால் டீஸ்பூன் உப்பு
கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்
தண்ணீர்
3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
1 கப் தேங்காய் துருவல்
முக்கால் கப் துருவிய வெல்லம்
1 டீஸ்பூன் ஏலக்கய் பொடி
வாழை இலை
கொஞ்சம் எண்ணெய்
செய்முறை: மைதாமாவு, மஞ்சள் பொடி, உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்துகொள்ளவும். இருக்கமாக பிசையாமல், இலகுவாக பிசைய வேண்டும், பிசைந்த மாவிற்கு மேலாக எண்ணெய் ஊற்றி, அப்படியே விடவும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் சேர்த்து வறுக்க வேண்டும். 5 முதல் 6 நிமிடங்கள் வரை வறுக்கவும். தொடர்ந்து இதை மிக்ஸியில் சேர்த்து, வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து அரைத்துகொள்ளவும். தற்போது இதை பூரணமாக பிடித்துகொள்ளவும். தொடர்ந்து வாழை இலையில் எண்ணெய் சேர்த்து, அதில் மாவை வட்டமாக தேய்த்து, அதற்குள் பூரணத்தை வைத்து முழுவதுமாக மூடிக்கொள்ள கொண்டு. மீண்டும் போலி போல் தேய்க்கவும். தொடர்ந்து இதை தோசைக்கலில் எண்ணெய் சேர்த்து இருப்பம் சுட்டு எடுக்கவும்.