வாழைப்பூ பொறியல் ரெசிபி : இப்படி செய்து பாருங்க
ஒரு முறை வாழைப்பூ பொறியல் இப்படி செய்யுங்க.
தேவையானவை: வாழைப்பூ – 2, மோர் – 2 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, துவரம் பருப்பு – 50 கிராம், தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: வாழைப்பூவில் நடுவில் உள்ள நரம்பு நீக்கி, மோர் கலந்த தண்ணீரில் ஊற கொள்ளவும். துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாழைப்பூவை நறுக்கி வேக வைத்து, தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும். அதன்பின் வாழைப்பூ, தேங்காய்த்துறுவல் வேக வைத்த பருப்பு, உப்புத்தூள் போட்டு கிளறி, இறக்கி பரிமாறவும்.