இதுக்காகவே இந்த புது டாடா எலக்ட்ரிக் காரை வாங்கலாம்!! பெட்ரோல் காரில் இந்த டெக்னாலஜி எல்லாம் கிடைக்காது!

டாடா நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரின் வெற்றியை தொடர்ந்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி காராக பன்ச் இவி-ஐ வெளியீடு செய்துள்ளது. இந்த காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. வழக்கமான பெட்ரோல்/ சிஎன்ஜி பன்ச் கார் உடன் ஒப்பிடுகையில் இந்த எலக்ட்ரிக் கார் எந்தெந்த வசதிகளை புதியதாக பெற்றுள்ளது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

புரோஜெக்டர் எல்இடி ஹெட்லேம்ப்கள்: வழக்கமான பன்ச் காரில் ஹலோஜன் புரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் தான் வழங்கப்படுகின்றன. ஆனால், புதிய பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரில் எல்இடி புரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், பன்ச் இவி காரின் முன்பக்கத்தில் எல்இடி டி.ஆர்.எல் ஸ்ட்ரிப்பும் இடம்பெற்றுள்ளது.

10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட்: விலை குறைவான டாடா எலக்ட்ரிக் கார்களுள் ஒன்றாக இருப்பினும், பன்ச் இவி எலக்ட்ரிக் காரில் பெரிய அளவில் இன்ஃபோடெயின்மெண்ட் திரையை தொடுதல் மூலம் கண்ட்ரோல் வசதி உடன் டாடா இவி நிறுவனம் வழங்கியுள்ளது. ஆனால், வழக்கமான பன்ச் காரில் 7 இன்ச்சில் டச் ஸ்க்ரீன் கொடுக்கப்படுகிறது.

டிரைவருக்கான 10.25 இன்ச் டிஜிட்டல் டிஸ்பிளே: விலையுயர்ந்த பன்ச் இவி கார் வேரியண்ட்டில் மட்டும், டிரைவருக்கு தகவல்களை வழங்கக்கூடிய திரையையும் டிஜிட்டல் தரத்தில், அளவில் நன்கு பெரியதாக பெறலாம். ஆனால், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பன்ச் பெட்ரோல் & சிஎன்ஜி கார்களில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மட்டுமே கொடுக்கப்படுகிறது.

6 ஏர்பேக்குகள்: பன்ச் பெட்ரோல்/ சிஎன்ஜி கார்களில் டாப் வேரியண்ட்டில் மட்டுமே 6 ஏர்பேக்குகளை பெற முடிகிறது. விலை குறைவான வேரியண்ட்களில் 2 ஏர்பேக்குகள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. ஆனால், மத்திய அரசின் தொடர் வலியுறுத்தலின் விளைவாக புதிய பன்ச் இவி எலக்ட்ரிக் காரில் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் கிடைக்கும்.

வெண்டிலேட்டட் முன் இருக்கைகள்: டாடா நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு வரும் இத்தகைய முன் இருக்கைகளை பன்ச் இவி காரிலும் டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. ஆனால், விலைமிக்க டாப் வேரியண்ட்டில் மட்டும். விலை குறைவான எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்களில் கிடைக்காது. பன்ச் பெட்ரோல்/ சிஎன்ஜி கார்களில் எந்த வேரியண்ட்டிலும் வெண்டிலேட்டட் இருக்கைகள் கிடைப்பதில்லை.

எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்: பன்ச் காரில் மேனுவல் பார்க்கிங் பிரேக்கை முன் இருக்கைகளுக்கு மத்தியில் டாடா நிறுவனம் வழங்கி வருகிறது. ஆனால், பன்ச் காரின் புதிய எலக்ட்ரிக் வெர்சனை எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் உடன் பெறலாம். சரிவான சாலைகளில் காரை கொண்டுச் செல்லும்போது இத்தகைய பார்க்கிங் பிரேக் பெரும் உதவியாக இருக்கும்.

360-டிகிரி கேமரா: புதிய பன்ச் இவி காரில் சவுகரிய அம்சங்கள் மட்டுமின்றி, பாதுகாப்பு அம்சங்களும் புதியதாக வழங்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமானது 360-டிகிரி சரவுண்ட் வியூ கேமரா சிஸ்டம் ஆகும். இது காரை சுற்றி இருக்கும் வாகனங்கள் மற்றும் ஆபத்துகளை காண உதவுவது மட்டுமின்றி, நெருடலான பகுதிகளிலும் எளிமையாக காரை பார்க் செய்வதற்கும் பெரிய உதவியாக இருக்கும்.

வயர்லெஸ் போன் சார்ஜர்: இத்தகைய மொபைல் சார்ஜர் இன்றைய கால மாடர்ன் கார்களில் பரவலாக வழங்கப்பட்டு வருகின்றது. இருப்பினும், புதிய பன்ச் இவி எலக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டில் மட்டும் இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதுவே, வழக்கமான பெட்ரோல்/ சிஎன்ஜி பன்ச் காரில் எந்த வேரியண்ட்டிலும் வயர்லெஸ் போன் சார்ஜர் கிடைப்பதில்லை.

லெதரேட் இருக்கைகள்: தொழிற்நுட்பத்திலும் சிறப்பானதாக இருக்கும் அதேநேரம், பயணிகளின் சவுகரியத்திலும் புதிய பன்ச் இவி சிறப்பானதாக உள்ளது. இதற்காகவே லெதரேட் இருக்கைகள் இந்த எலக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், வழக்கமான பன்ச் காரில் ஸ்டேரிங் சக்கரத்திற்கும், டிரைவ் செலக்டருக்கும் மட்டுமே லெதரேட் கொடுக்கப்படுகிறது.

ஏ.க்யூ.ஐ டிஸ்பிளே உடன் காற்று சுத்திகரிப்பான்: புதிய பன்ச் இவி காரில் காற்று சுத்திக்கரிப்பான் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்டு வழங்கப்பட உள்ளது. இந்த காற்று சுத்திகரிப்பானுக்கான கண்ட்ரோல் திரையை டேஸ்போர்டில் வழங்கப்படும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திலேயே பெறலாம். இதன் மூலமாக, காரின் கேபினுக்குள் காற்றின் தரத்தை ரியல் டைமில் அறிய முடியும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *