Cricket Titbits – ஒரே பெயருடன் விளையாடிய 2 இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்
சென்னை : ஒரே மாதிரியான பெயர்களை கொண்ட இரண்டு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களைப் பற்றிய விவரங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
இந்த ஆட்டக்காரர் தனது கடைசி டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதங்கள் எடுத்தவர். இவர் தான் இங்கிலாந்து அணிக்காக முதல் முறையாகவும் இரண்டு இன்னிங்சிலும் சென்சுரி அடித்தவர்.
ஆடிய 10 டெஸ்டுகளில் 5 சதங்கள் எடுத்தவர். இரண்டு வருடம் இரண்டு மாதங்கள் மட்டும் டெஸ்டுகள் விளையாடியவர். 1923 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 140 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 111 ரன்களும் குவித்து ஒரே டெஸ்டின் இரண்டு இன்னிங்சில் சதம் பதித்த சாதனை புரிந்தார்.
இந்த டெஸ்ட் ஆடும் பொழுது இவருக்கு உடல் நலம் சரியில்லை. குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸ் ஆடவே மாட்டார் என்ற நிலையிலும் ஆடி சாதனை புரிந்தார். இவர் டெஸ்ட் கிரிக்கெட் சரித்திரத்தில் இத்தகைய சாதனை புரிந்த இரண்டாவது வீரர். இவர் பெயர் ஜாக் ரஸ்ஸல் . ( Jack Russell)
டெஸ்டுகளில் 910 ரன்கள் எடுத்தார். சராசரி 56.87 ரன்கள். முதல் தர கிரிக்கெட்டில் 71 சதங்களும்27354 ரன்களும் எடுத்தவர்.ஆஸ்திரேலிய அணியின் டபிள்யூ பார்ட்ஸ்லே ( W Bardsley ) என்பவர் 1909 ஆம் வருடம் இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டு இன்னிங்சிலும் சதம் எடுத்த முதல் வீரராவார். முதல் இன்னிங்சில் 136 மற்றும் இரண்டாவதில் 130 ரன்கள் குவித்தார், இந்த சாதனையின் போது.
இந்த ஜாக் ரஸ்ஸலின் தந்தை தாமஸ் ரஸ்ஸல் எஸ்ஸக்ஸ் கவுண்டி ( Essex County team) டீமிற்காக முதல் தர கிரிக்கெட் விளையாடியவர். அந்த டீமின் விக்கெட் கீப்பராக திகழ்ந்தவர்.இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் மேட்சுகள் விளையாடிய மற்றும் ஒருவர் பெயரும் ஜாக் ரஸ்ஸல். இவர் விக்கெட் கீப்பராக திகழ்ந்தவர். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 20 கோப்பைகள் தேநீர் ( drinking Tea ) அருந்துவார். இவரது ஆசானாக வழி நடத்துபவர் ஆக ( mentor) இருந்தவர் இங்கிலாந்தின் புகழ் பெற்ற விக்கெட் கீப்பர் ஆலன் நாட் . ( Alan Knott) அவரும் அதிகமாக தேநீர் அருந்தும் பழக்கம் உடையவர்.
ஜாக் ரஸ்ஸல் பிறந்த தினம் 15 ஆகஸ்ட் 1963. இடது கை பேட்ஸ்மன் வலது கையினால் ஆப் பிரேக் பவுலிங் செய்வார். டெஸ்டுகளில் விக்கெட் கீப்பராக திகழ்ந்தார். 54 டெஸ்டுகளில் 1897 ரன்கள் குவித்தவர், 2 சதங்கள் உட்பட.
153 கேட்சுகள் பிடித்தவர். 12 ஸ்டம்பிங்களும் செய்துள்ளார்.
40 ஒரு நாள் பந்தயங்களில் பங்கு பெற்றவர். இவரது 14 வது பிறந்த தினம் நெருங்கும் பொழுது, டிவியில் பார்த்த கிரிக்கெட் மேட்ச் காட்சி இவர் விக்கெட் கீப்பிங்கை தேர்ந்து எடுக்க உந்துக் கோலாக இருந்துள்ளது.
அந்தக் குறிப்பிட்ட நிகழ்வில் ஆலன் நாட் ஒரே தாவாக தாவி முதல் ஸ்லிப் பீல்டர் பிடிக்க இருந்த கேட்சை பிடித்து அசத்திய தருணம். அந்த காட்சி ஜாக் ரஸ்ஸல் மனதில் ஆழ பதிந்து விட்டது. இவருக்கு நம்பிக்கையையும் அளித்து, எதிர் காலத்தில் சிறந்த டெஸ்ட் விக்கெட் கீப்பராக திகழ வித்திட்டு வளர வழியும் வகுத்து கொடுத்தது.
சூழ்நிலைக்கு ஏற்ப நின்று நிதானமாகவும் பேட்டிங் செய்வதில் வல்லவர் ஜாக் ரஸ்ஸல் . 1995 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்க டீமிற்கு எதிராக மைக் அத்தேர்ட்டனுடன் ( Michael Atherton ) ஜோடி சேர்ந்து 119 ரன்கள் பார்ட்னெர்ஷிப்பில் இங்கிலாந்து அணி மேட்சை காப்பாற்ற பெரிதும் உதவினார்.