பகீர் வீடியோ… 6வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை! அதிர்ந்த கல்லூரி… அலறிய தோழிகள்!
தங்களுடன் ஒன்றாக படித்து வந்த ரேணு ஸ்ரீ , திடீரென கல்லூரியின் 6வது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொள்வதற்காக குதித்ததைய் அடுத்து கல்லூரியில் உடன்படிக்கும் தோழிகள் அதிர்ந்தார்கள்.
இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாக இப்போது மொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் பிடெக் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி ரேணு ஸ்ரீ, கல்லூரியின் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் அருகே உள்ள பட்டாஜ்செருவில் உள்ள கீடெம் பல்கலைக்கழக கல்லூரியில் மாதாபூரை சேர்ந்த ரேணு ஸ்ரீ என்ற மாணவி பிடெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை, வகுப்புகள் அனைத்தும் முடிந்த பின்னர், கல்லூரியின் 6வது மாடிக்கு சென்ற மாணவி ரேணு ஸ்ரீ, திடீரென சுவரில் இருந்த கைப்பிடியில் ஏறி கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இந்த தற்கொலை முயற்சியை பார்த்த சக மாணவர்கள் குதிக்க வேண்டாம்… குதிக்க வேண்டாம்… என கூச்சலிட்டனர். ஆனால், தன்னுடைய முடிவில் உறுதியாக மாணவி ரேணு ஸ்ரீ, ஆறாவது மாடியில் இருந்து குதித்து பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அங்கிருந்த மாணவர்கள் சிலர் இந்த காட்சியை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த போலீசார் ரேணுஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் கல்லூரி மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.