PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு..! திருமணத்திற்கு பிறகு இதை செய்யாவிட்டால் பணம் கிடைக்காது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கிய முதல்நாளே 5.5 லட்சம் கோடி இலக்கை எட்டியுள்ளது என தொழில்துறை செயலாளர் அருண்ராய் தெரிவித்துள்ளார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. இந்த மாநாட்டையொட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பல்வேறு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்த்­தாய் வாழ்த்­து­டன் மாநாடு தொடங்­கியது. அதனைத்தொடர்ந்து, தமிழ்­நாடு தொழில்­துறை அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா வர­வேற்­புரை ஆற்­றினார். அதன்­பின், முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் உலக முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்டை தொடங்கிவைத்து உரை­யாற்­றினார்.

இந்த நிகழ்வில் மத்திய தொழில்­துறை அமைச்­சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்­தி­ன­ராக பங்­கேற்றார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசை வழங்கினார். இந்த மாநாட்­டில் தொழில்­கள் அடிப்­ப­டை­யி­லான பல்­வேறு தனித்­தனி அமர்­வு­கள் நடத்தப்பட்டன. ஜவுளி, காலணி தொழில்­கள், மின்­சார வாக­னங்­கள் மற்றும் வேளாண் தொழில்­நுட்­பங்­கள் உள்­ளிட்ட பல்­வேறு அமர்­வு­கள் நாளையும் நடத்­தப்­பட உள்­ளன.

இதுகுறித்து தொழில்துறை செயலாளர் அருண்ராய் தெரிவித்ததாவது:

‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கிய முதல்நாளே 5.5 லட்சம் கோடி இலக்கை எட்டியுள்ளது. 100க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முன்னணி நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன. 2015-ம் ஆண்டு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3.43 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இன்று நடைபெற்று வரும் முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளே அதன் இலக்கான 5.5 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈட்டி உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *