Sani: சனியின் அதிர்ஷ்டங்கள் ஆரம்பமாச்சு..புத்தாண்டு யோகராசிகள் இவர்கள்தான்
நவகிரகங்களில் சனிபகவான் நீதிமானாக விளங்கக் கூடியவர். எப்போதும் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பது இவருடைய வேலை. கர்ம நாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் நன்மைகள் மற்றும் தீமைகள் என அனைத்தையும் சரிசமமாக திருப்பிக் கொடுப்பார்.
நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் சனி பகவான் திருக்கணித சாஸ்திரத்தின் படி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு கடந்த டிசம்பர் 20ஆம் தேதி அன்று இடமாற்றம் செய்தார்.
சனிபகவானின் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும். ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தில் குளிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
வரக்கூடிய 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு நல்ல காலமாக அமையும். தொட்ட காரியம் அனைத்தும் வெற்றி அடையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் கணவன் மனைவிக்கிடையே இருந்த சிக்கல்கள் குறையும்.
ரிஷப ராசி
சனிபகவான் உங்களுக்கு நல்ல வளர்ச்சியை கொடுக்க போகின்றார். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.
மிதுன ராசி
சனிபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். பணவரவில் இருந்து குறையும் இருக்காது. தனயோகம் உங்களை தேடி வர போகின்றது. பொருளாதாரத்தில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். பண வரவிலிருந்து தடைகள் அனைத்தும் நீங்கும்.
கடக ராசி
சனிபகவானால் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பொருளாதாரத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியம் அனைத்தும் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.