என்னை சிறையிலேயே இறப்பதற்கு அனுமதியுங்கள்.. கதறி அழுத நரேஷ் கோயல்.!
கனரா வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் நீதிமன்றத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனது மனைவிக்கு புற்றுநோய் இருப்பதாகவும், மகள் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், தற்போது இருக்கும் நிலையில் வாழ்வதை விட சிறையில் இறப்பதே மேல் என்றும் நீதிபதி முன் கதறி அழுதார். வங்கி மோசடி தொடர்பாக கோயலை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி கைது செய்தது.