அசிங்க சென்னையாக மாற்றப்படும் சிங்கார சென்னை.. ‘மியாவாக்கி வனம்’ நிலையை பாருங்க.. கொதிக்கும் பாஜக!
சென்னை: சிங்கார சென்னை என்று சொல்லிவிட்டு அசிங்க சென்னையாக மாற்ற முயற்சிக்கும் சில பொறுப்பற்றவர்களை மாநகராட்சி நிர்வாகம் கேள்வி கேட்குமா?
lஎன தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
பருவநிலை மாற்றத்தை தவிர்க்க ஜப்பானின் அகிரா மியாவாக்கி (Akira Miyawaki) என்ற தாவரவியல் வல்லுநர் இடைவெளி இல்லாமல் அதிக எண்ணிக்கையில் நெருக்கமாக மரங்கள் வளர்க்கும் முறையை கண்டுபிடித்தார். மியாவாக்கி காடுகள் என அழைக்கப்படும் இந்த முறையில் மரங்கள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு, விரையில் செழிப்பான காடாக மாறும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனை பின்பற்றி அடையாறு மண்டலம் கஸ்தூரிபா காந்தி நகரில் குப்பை மேட்டை மியாவாக்கி வனமாக மாற்றியது சென்னை மாநகராட்சி.
இந்நிலையில், தற்போது அடையாறு கஸ்தூரிபாய் காந்தி நகர் ரயில் நிலையத்திலிருந்து இந்திரா நகர் ரயில் நிலையம் வரையிலான மியாவாக்கி வனத்தில் குப்பைக் குளங்கள் மண்டிக் காணப்படுகிறது. இதுதொடர்பாக புகார் அளித்தும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள பதிவில், “நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ? என்றார் பாரதி. சில வருடங்களுக்கு முன் ‘சென்னையில் வனம்’ எனும் கருத்தில் சில இடங்களில் பல கோடி ரூபாய் செலவில் ‘மியாவாக்கி’ வனங்களை உருவாக்கியது சென்னை மாநகராட்சி. பல ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை, செடி, கொடிகளை வளர்த்து சென்னை நகரத்து மையத்தில் அற்புதமான சூழ்நிலையை ஏற்படுத்தியதால், இந்த வனங்களில் அந்தந்த பகுதி மக்கள் காலை, மாலை வேளைகளில் நடைப்பயிற்சி மேற்கொள்வதை பெரிதும் விரும்புகின்றனர்.