இன்னும் 10 வருடத்தில் எந்தத் தொழிலும் இருக்காதா? 2025 இல் என்னென்ன தொழில்கள் இருக்காது தெரியுமா?
இன்னும் 10 வருடத்தில் எந்தத் தொழிலும் இருக்காது என்று கூறி ஆச்சர்யப்பட வைக்கிறார்கள் நெட்டிசன்கள்..
2025 இல் என்னென்ன தொழில்கள் இருக்கும் என்பது குறித்தும், என்னென்ன தொழில்கள் இருக்காது ? என்பது குறித்தும் பட்டியல் போட்டு திகைக்க வைத்துள்ளார்கள். அதை பற்றி இப்போது பார்ப்போம்.
ஏஐ தொழில் நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளால் இந்த உலகத்தில் பல தொழில்கள் காணாமல் போக போகிறது.. அடுத்த 10 வருடங்களில் பெரும்பாலான தொழில்கள் இருக்காது என்ற நிலை ஏற்பட போகிறது. வரும் 2025ல் என்னென்ன தொழில்கள் இருக்கும், என்னென்ன தொழில்கள் இருக்காது என்பது பற்றியும், அடுத்த 10வருடத்தில் ஏற்பட போகும் தாக்கம் குறித்து ட்விட்டரில் சிந்தனை என்பவர் வெளியிட்ட பார்வேடு பதிவினை இப்போது பார்ப்போம்.
2025 இல் என்னென்ன தொழில்கள் இருக்கும்? என்னென்ன தொழில்கள் இருக்காது ?? நிலைமை இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது தவறு, நாம தான் நம்மள மாத்திக்கணும்… 1998 இல் தொடங்கின Kodak (Photo) நிறுவனம், ஒரு லட்சத்து எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கைப் போடு போட்டது… இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்லை… வெள்ளை பேப்பர்ல பிரிண்ட் எடுத்து தான் போட்டோ பார்க்க முடியும் அது ஆனால் இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும் னு அவங்க நினைக்கவே இல்ல…
பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அது தான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும்… தெருவுக்கு தெரு முளைச்ச PCO, STD & ISD பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு?? எலக்ட்ரானிக் டைப்ரைட்டர், பேஜர், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், ரேடியோ, டேப்ரெக்கார்டர், விசிஆர், வாக்மேன், டிவிடி பிளேயர் என சொல்லிக் கொண்டே போகலாம்…