ராமர் கோயில் கும்பாபிஷேக விழா: கிராமங்களில் உள்ளோருக்கும்.. மத்திய அரசு சூப்பர் பிளான்.!!
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ஜன.22 இல் நடக்கும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தரபிரதேச மாநில அரசு தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் கிராமங்களில் அகன்ற திரைகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவ் விழாவை நாட்டு மக்கள் அனைவரிடமும் கொண்டு செல்ல பாஜக மும்முரம் காட்டி வருகிறது. இதற்காக 6 கோடி பேரை பாஜக தேர்வு செய்துள்ளது. அவர்கள் ஒவ்வொரு எம்.பி., தொகுதிகளிலும் உள்ள பூத் கமிட்டியினருடன் ஆலோசனை செய்து அயோத்தி நேரடி ஒளிபரப்பு ஏற்பாடுகளை செய்ய தொடங்கி உள்ளனர்.