சச்சின் டூ சல்மான் கான் வரை! மோடிக்கு ஆதரவாக இறங்கிய பிரபலங்கள்! கலங்கும் மாலத்தீவு! தெறிக்கும் X
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், சல்மான் கான் முதல் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் வரை பல பிரபலங்கள் இன்று லட்சத்தீவுக்கு ஆதரவாக பதிவுகள் செய்து பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் மாலத்தீவு கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் லட்சத்தீவுக்கு சென்றார். லட்சத்தீவு கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி ஸ்நோர்கெலிங் முறையில் கடலில் நீந்தினார். மேலும் அதுதொடர்பான போட்டோக்களை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அந்த பதிவில், ”லட்சத்தீவு மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தீவின் வியக்க வைக்கும் அழகு மற்றும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பை பார்த்து நான் பிரமிப்பில் இருக்கிறேன். இங்குள்ள மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன்” என தெரிவித்து இருந்தார்.