பத்திரிகையில் முளைத்த பஞ்சாயத்து’.. கலைஞர் 100 நிகழ்ச்சிக்கு விஜய் அஜித் வராதது ஏன்? – காரணம் இங்கே!
கலைஞர் 100 நிகழ்ச்சியானது நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, நயன்தாரா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற போதும், தமிழ் சினிமாவின் துருவ நட்சத்திரங்களாக இருக்கக்கூடிய நடிகர்கள் அஜித்தும், விஜயும் பங்கேற்கவில்லை.
இது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. அதற்கான காரணத்தை பிரபல விமர்சகரான வலைப்பேச்சு அந்தணன் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார்.
அவர் பேசும் போது, “கலைஞர் 100 நிகழ்ச்சியில், அஜித் விஜய் வருவார்கள் என்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு குவிந்தார்கள். ஆனால் அவர்கள் இருவரும் நிகழ்ச்சிக்கு வரவில்லை.
இந்த நிகழ்ச்சியை குழு ஏற்பாடு செய்த போது, அஜித் அஜர் பைஜான் நாட்டிலும், விஜயின் கோட் படம் தொடர்பாக பல்வேறு வெளிநாடுகளிலும் நடப்பதாக இருந்தது.
ஆனால் அதிஷ்டவசமாக இரண்டு பேரும் நேற்று சென்னையில்தான் இருந்தார்கள். நடிகர் அஜித் நேற்று முன்தினமே துபாயில் இருந்து சென்னைக்கு வந்து விட்டார். விஜயும் சென்னையில் தான் இருந்தார்.
அப்படி இருக்கும் பொழுது அவர்கள் ஏன் வரவில்லை என்று தேடிய போது, விழா அழைப்பிதழில் ரஜினி கமலுக்கு கொடுத்த மரியாதை விஜய் அஜித்திற்கு கொடுக்கவில்லை என்பது தகவலாக வந்து நிற்கிறது.
இந்த கோபம் ரசிகர்களுக்கும் இருந்தது. இது விவாத பொருளாகவும் மாறியது.