சூர்யாவிற்கு கதை சொல்லி ஓகே செய்த இயக்குனர் ரவிக்குமார்!
இன்று நேற்று நாளை என்ற படத்தின் இயக்குனரான ரவிக்குமார், அதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் என்ற படத்தை இயக்கியிருந்தார்.
சில ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த அப்படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இந்த படமும் அவரது முதல் படத்தை போலவே சயின்ஸ் பிக்சன் கதையில்தான் உருவாகி இருக்கிறது. இதையடுத்து அவர் ஒரு சயின்ஸ் பிக்சன் கதையை உருவாக்கி அந்த கதையை சூர்யாவிடத்தில் கூறியிருக்கிறார். அதை கேட்ட அவர், தற்போது தனது கைவசமுள்ள படங்களில் நடித்து முடித்ததும் இந்த படத்தில் நடிப்பதாக ரவிக்குமாருக்கு உறுதி அளித்திருக்கிறாராம். அந்த வகையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கும் ‘இரும்புக்கை மாயாவி’ படத்துக்கு பிறகு ரவிக்குமார் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பார் என்று தெரிகிறது.