Ayalaan Third Single: அயலான் படத்தின் மூன்றாவது பாடல்… முழு வரிகள் இதோ.
ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ரகுல் ப்ரீத், கருணாகரன், யோகிபாபு உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அயலான் படத்தில் இருந்து இதுவரை வேற லெவல் சகோ மற்றும் அயலா அயலா ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தில் மூன்றாவது பாடலான சூரோ சூரோ பாடல் வெளியாகியுள்ளது.
மதன் கார்க்கி இந்த பாடலை எழுதியுள்ள நிலையில் மோஹித் செளஹன் மற்றும் நகுல் அப்யங்கர் இந்தப் பாடலை பாடியுள்ளார்கள். சிவகார்த்திகேயன் ம, ரகுல் ப்ரீத் மற்றும் ஏலியன் என மூன்று பேர் இணைந்து நடனமாடும் பெப்பியான பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது.