கோவையில் வருகிற 12 ஆம் தேதி.. வானில் பறக்க ரெடியா மக்களே..? ஜாலியோ ஜாலி அறிவிப்பு.!!
தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பாக பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழாவானது வருடம்தோறும் நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவை காண்பதற்கு வெவ்வேறு நாடுகளில் இருந்தும் வரவழைக்கப்படும் ராட்சத பலூன்களில் ஏறி பொதுமக்கள் பயணம் செய்யலாம். மேலும் பொள்ளாச்சியின் அழகை வானில் பறந்து கொண்டே கண்டுகளிக்கலாம். இதனிடையை நடப்பு வருடம் பாலூன் திருவிழா எப்போது நடைபெறும் என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் இப்போது அதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பொள்ளாச்சியில் வருகிற 12ம் தேதி முதல் 16ஆம் தேதி வரை இந்த திருவிழா நடைபெற இருக்கிறது.
இதில் எட்டுக்கும் மேற்பட்ட ராட்சத பலூன்கள் அனைத்தும் பொள்ளாச்சிக்கு வரவழைக்கப்படுகிறது. இந்த பலூன் திருவிழாவானது இந்தியாவிலேயே கோவையில் மட்டும் தான் நடத்தப்படுகிறது என்பது இதன் தனி சிறப்பு.