மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது…. நீலகிரியில் பரபரப்பு

நீலிகிரியில் சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தாயின் கண்முன்னே சிறுமியை சிறுத்தை இழுத்த சென்ற சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி என்ன?
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள ஏலமன்னா கிராமம் அருகே கடந்த சில நாட்களாக மனிதர்களை தாக்கி அச்சுறுத்தி வரும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். கடந்த டிசம்பர் 21ம் தேதி, ஏலமன்னா அருகே பழங்குடியின மக்கள் வசித்து வரும் பகுதியில் 29 வயதான சரிதா என்ற பெண்ணை ஊருக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியது.

அதே நாளில் வள்ளியம்மாள் மற்றும் துர்க்கா ஆகிய 2 பெண்கள் மீதும் சிறுத்தை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தொடர் தாக்குதலில் மூவரும் காயமடைந்த நிலையில், பலத்த காயமடைந்த சரிதா 6 நாட்கள் சிகிச்சைக்குப் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கிராம மக்கள் அச்சத்துடனேயே நடமாடி வந்தனர்.

இந்நிலையில், ஜனவரி 4ம் தேதி கொளப்பள்ளி, டேன்டீ பகுதியில், 4 வயது குழந்தை கிருத்திகா மீது சிறுத்தை நடத்திய தாக்குதலில் அந்த குழந்தை படுகாயமடைந்தார். இதனால் கொந்தளித்த கிராம மக்கள் கடையடைப்பு, சாலைமறியல் என போராட்டத்தில் இறங்கினர்.

கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வனத்துறையினர் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க களத்தில் இறங்கியிருப்பதாக விளக்கம் அளித்த பின் கலைந்து சென்றனர். சிறுத்தையைப் பிடிக்க 2 கால்நடை மருத்துவர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் 20 பேர், வனப் பணியாளர்கள் 50 பேர் களத்தில் இறங்கினர்.

சிறுத்தை நடமாடும் பகுதிகளில் 6 கூண்டுகள் அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்த நிலையில்தான் சனிக்கிழமை நான்சி என்ற மற்றொரு குழந்தை சிறுத்தை வேட்டையாடி இழுத்துச் சென்றுள்ளது.

மேங்கோ ரேஞ்ச் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடியிலிருந்து குழந்தை நான்சியை அவரது தாயார் மாலை 3 மணியளவில் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது திடீரென தேயிலைத் தோட்டத்தில் மறைந்திருந்த சிறுத்தை தாயின் கண் முன்னே சிறுமியை தாக்கி இழுத்துச் சென்றது.

உடனே தாயின் அலறல் சத்தம் கேட்டு பதறிப் போய் ஓடி வந்த தொழிலாளர்கள் தேயிலை தோட்டம் முழுவதும் சிறுமியை தேடினர். அவர்களுடன் சேர்ந்து வனத்துறையினரும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

ஒரு புதர் பகுதியில் ரத்தம் சிந்திக் கிடப்பதைப் பார்த்த பொதுமக்கள் புதுருக்குள் பார்த்த போது படுகாயங்களுடன் குழந்தை கிடப்பதைப் பார்த்து மீட்டனர். உடனே சிறுமியை வனத்துறை தூக்கிக் கொண்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

:டைட்டிலை மாத்தலைனா கிரிமினஸ் கேஸ் போடுவோம்… விக்னேஷ் சிவனுக்கு எல்.ஐ.சி நிறுவனம் எச்சரிக்கை!

உயிரிழந்த குழந்தை, ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்கு வந்த வடமாநிலத் தொழிலாளியின் மகள் என்பது தெரியவந்துள்ளது. குழந்தை உயிரிழப்பால் கொந்தளித்த வடமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், பந்துலூர், தேவாலா, தொண்டியாலம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 3 வாரங்களில் 3 தாக்குதலில் ஈடுபட்ட கொலைவெறி சிறுத்தையை பிடிக்காத வனத்துறையினர் மீது பாதிக்கப்பட்ட கிராம மக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து ட்ரோன் கேமராவை வரவழைத்த வனத்துறையினர் சிறுத்தை நட


இந்நிலையில் டிரோன் கேமராவில் சிக்கிய சிறுத்தையை இரண்டாவது டோஸ் மயக்க ஊசி செலுத்தினர். முதல் டோஸ் மயக்க மருந்து செலுத்தப்பட்ட நிலையில் வனத்துறையினருக்கே போக்கு காட்டி வந்த சிறுத்தை 2 ஆவது ஷாட் மயக்க மருந்திற்கு மயங்கி விழுந்தது. இதையடுத்து பிடிபட்ட சிறுத்தையை வனத்துறையினர் கூண்டில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *