கொரிய மக்கள் ஃபிட்டா ஸ்லிம்மா இருக்க.. அவங்களோட இந்த 5 பழக்கங்கள் தான் காரணமாம்…

Weight Loss Tips In Tamil: உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களின் உணவுகள் மற்றும் அவர்களின் சில பழக்கவழக்கங்கள், அந்த பகுதி மக்களை ஃபிட்டாகவும், நீண்ட நாள் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

நீங்கள் உடல் பருமனால் அவதிப்பட்டு வந்தால், உடல் எடையைக் குறைக்க முயற்சித்து வந்தால், கொரிய மக்களின் பழக்கங்களை மேற்கொண்டு வந்தால், விரைவில் உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

ஏனெனில் அந்த அளவில் கொரிய மக்களின் உணவு பழக்கங்கள் அவர்களது உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பெரிதும் உதவி புரிகின்றன. மேலும் அவர்களின் பழக்கவழக்கங்களால் தான் அவர்கள் சீரான மற்றும் அழகான சருமத்தைக் கொண்டுள்ளனர்.

நீங்கள் உங்களின் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், கீழே கொரிய மக்களின் ஃபிட்டான உடலுக்கு அவர்கள் மேற்கொள்ளும் சில பழக்கவழக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பின்பற்றி நல்ல மாற்றத்தைக் காணுங்கள்.

காய்கறிகள்

கொரிய மக்கள் அசைவ உணவுகள் மற்றும் கடல் உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். அதற்காக அவர்கள் காய்கறிகளை சாப்பிடாமல் இருக்கமாட்டார்கள். எவ்வளவு அசைவ உணவுகளை உட்கொண்டாலும், தினமும் போதுமான அளவில் காய்கறிகளை உட்கொள்வார்கள். இது தான் இவர்களின் ஸ்லிம்மான மற்றும் ஆரோக்கியமான உடலுக்கு முக்கிய காரணம். எனவே இந்த பழக்கத்தை நீங்களும் கொள்ளுங்கள்.

நொதிக்க வைக்கப்பட்ட உணவுகள்

கொரியாவின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய உணவு தான் கிமிச்சி. இந்த கிமிச்சியானது நொதிக்க வைக்கப்பட்ட காய்கறிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலும் இதில் முட்டைக்கோஸ், முள்ளங்கி, பச்சை வெங்காயம் போன்றவை பயன்படுத்தப்படும். மேலும் இதன் மேல் உப்பு, சர்க்கரை, வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகாய், மிளகு போன்றவை சேர்க்கப்பட்டிருக்கும். பொதுவாக நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளானது செரிமான செயல்பாட்டை துரிதப்படுத்தி, உடல் எடையை வேகமாக குறைக்க உதவி புரியும்.

மிதமான ஃபாஸ்ட்புட் உணவுகள்

கொரிய மக்கள் ஃபாஸ்ட்புட் உணவுகளை விட, வீட்டில் சமைத்த உணவுகளையே அதிகம் சாப்பிடுவார்கள். இவர்களின் பெரும்பாலான உணவுகள் வீட்டில் சமைத்ததாகவே இருக்கும். வெளியே சாப்பிடுவது என்பது எப்போதாவது தான் நடக்கும். இப்படியான பழக்கத்தினால் தான் இவர்களின் உடல் ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறது.

உடற்பயிற்சி

கொரிய மக்களின் வாழ்க்கை முறையை எடுத்துக் கொண்டால், இந்நாட்டு மக்கள் அதிகம் நடப்பார்கள், சைக்கிள் ஓட்டுவார்கள். அதுவும் தொலைதூர பயணங்களைத் தவிர, குறுகிய தூர பயணங்களுக்கு எல்லாம் இந்நாட்டு மக்கள் பெரும்பாலும் நடந்து தான் செல்வார்கள். இப்படியான பழக்கத்தினால் தான், இவர்களின் உடல் ஆரோக்கியமாகவும், தொப்பையின்றியும் இருக்கிறார்கள்.

கடல் உணவுகள்

ஏற்கனவே கூறியது போல், கொரிய மக்கள் காய்கறிகளுக்கு அடுத்தபடியாக கடல் உணவுகளையே அதிகம் சாப்பிடுவார்கள். கடல் உணவுகளில் உடலுக்கு வேண்டிய முக்கியமான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. சொல்லப்போனால் இவர்களின் தினசரி உணவில் நிச்சயம் கடல் உணவுகளும் இருக்கும். கடல் உணவுகளில் லீன் புரோட்டீன் வளமான அளவிலும், கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாகவும் உள்ளன. எனவே மற்ற இறைச்சிகளை விட மீனை உட்கொள்ளும் போது, அதை எளிதில் செரிமானமாகும். முக்கியமாக நீண்ட நேரம் வயிறும் நிரம்பியிருக்கும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள பழக்கங்கள் அனைத்துமே கொரிய மக்களின் ஃபிட்டான மற்றும் ஆரோக்கியமான உடலுக்கு முக்கிய காரணங்களாகும். எனவே நீங்கள் கஷ்டப்படாமல் உடல் எடையை எளிதில் குறைக்க விரும்பினால், இந்த கொரிய மக்களின் பழக்கங்களை மேற்கொள்ளுங்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *