துபாய்ல இருந்து கொண்டு வரப்பட்ட 12கோடி ரூபா கார்.. இப்படியா நடக்கணும்.. இனி ஸ்கூட்டரை பார்த்தாலே பயப்படுவாங்க!
சொந்த ஊரில் கெத்துக் காட்டுவதற்காக வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட சூப்பர் கார் ஒன்று மோசமான இரண்டு சக்கர வாகன ஓட்டி ஒருவரால் விபத்துக்குள்ளாகி இருக்கின்றது. இந்த நிகழ்வுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. வாருங்கள் இதுகுறித்த விரிவான தகவலைக் காணலாம்.
உலகின் மிக மிக விலை உயர்ந்த கார் மாடல்களில் ஒன்றாக மெக்லாரன் (McLaren) நிறுவனத்தின் 765 எல்டி (765 LT)-யும் ஒன்றாகும். இது ஓர் சூப்பர் கார் (Super Car) ஆகும். இந்த காரே இந்திய சாலையில் வலம் வந்துக் கொண்டிருந்தபோது இரண்டு சக்கர வாகன ஓட்டி ஒருவரால் விபத்தைச் சந்தித்து இருக்கின்றது.
இந்த காரின் மதிப்பு ரூ. 12 கோடி என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த விபத்து சம்பவம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலேயே அரங்கேறி இருக்கின்றது. சூப்பர் கார் துபாயில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த விபத்திற்கு ஸ்கூட்டர் ரைடர் காரணமல்ல என்பதும் இங்கு கவனிக்கத்தகுந்தது.
கூட்டருக்கும் பின்னால் வந்த கேடிஎம் ட்யூக் பைக் ரைடராலேயே இந்த விபத்து அரங்கேறி இருக்கின்றது. கேடிஎம் ட்யூக், ஹோண்டா ஆக்டிவா மீது முதலில் மோதியிருக்கின்றது. இந்த தாக்கத்தினாலேயே ஆக்டிவா மெக்லாரன் சூப்பர் காரின் பின் பகுதியில் மோதியது. இதனால் மூன்று வாகனங்களுக்கும் லேசான பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கின்றன.
குறிப்பாக, மெக்லாரன் சூப்பர் கார் பாதிப்பானது வாகன ஆர்வலர்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்திருக்கின்றது. சொல்லப்போனால், இந்த விபத்திற்கு காரணமே அந்த சூப்பர் கார் என கூறப்படுகின்றது. அந்த காரை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் ட்யூக் ரைடர் வேகமாக வந்ததன் விளைவாகவே விபத்து அரங்கேறி இருக்கின்றது.
அந்த கார் பயணித்த அனைத்து சாலைகளிலும் ஒருத்தரை தவறவில்லை, அனைவரும் அந்த காரையே வெறிக்கவெறிக்க பார்த்தனர் என்று கூறலாம். அந்த அளவிற்கு பலரின் கவனத்தை மெக்லாரன் சூப்பர் கார் தன் வசம் ஈர்த்தது. இந்த நிலையிலேயே ட்யூக் பைக் ஓட்டியால் விபத்து அரங்கேறி இருக்கின்றது.
சொந்த ஊரில் கெத்துக் காட்டலாம் என்பதற்காக கொண்டு வரப்பட்ட காருக்கு இந்த நிலைமையா என்றே இந்த விபத்து சம்பவம் நம்மில் பலரை கவலையடையச் செய்திருக்கின்றது. இந்த 12 கோடி ரூபாய் மதிப்புள்ள சூப்பர் காருக்கு சொந்தக்காரர் பெங்களூருவைச் சேர்ந்த ரஞ்ஜித் சுந்தரமூர்த்தி என கூறப்படுகின்றது.
ஆர்எஸ்எம் என்கிற பெயரிலும் இவர் அடையாளம் காணப்படுகின்றார். இந்த தொழிலதிபர் தற்போது மொத்தமாக துபாய்க்கு குடிபெயர்ந்திருக்கின்றார். அதேவேளையில் அவ்வப்போது இந்தியா வருவதுண்டு. அந்தவகையில், இம்முறை பெங்களூரு வந்தபோதே அவருடன் சேர்த்து கார்னெட் வாயிலாக துபாயில் இருந்து மெக்லாரன் 765 எல்டி சூப்பர் காரையும் கொண்டு வந்திருக்கின்றார்.
பொதுவாக இவர் இந்த காரில் வலம் வரும்போது அவருடன் பாதுகாவலர்களும் வருவதுண்டு. அவர்கள் டொயோட்டா இன்னோவா எம்பிவி காரிலேயே வருவார்கள். ஆனால், சம்பவத்தன்று அவர்கள் வந்ததாக தெரியவில்லை. இந்த நிலையிலேயே கார் விபத்தில் சிக்கி இருக்கின்றது. இதனால்தான் இதுபோன்று சூப்பர் கார்களில் வலம் வரும்போது பாதுகாவலர்கள் தேவை என கூறப்படுகின்றது.
உலகின் அதிக வேகத்தில் இயங்கும் திறன் கொண்ட சூப்பர் கார்களில் மெக்லாரன் 765 எல்டி கூபேவும் ஒன்றாகும். இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 765 பிஎஸ் பவரையும், 800 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.
7 ஸ்பீடு கியர்பாக்ஸே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் பின்வீல் இயக்கம் கொண்ட சூப்பர் காராகும். மேலும், இது ஓர் அரிய வகை கார் மாடலாகும். 765 மாடலின் லிமிட்டெட் வெர்ஷனே 765 எல்டி ஆகும். இத்தகைய அதிக பவர்ஃபுல்லான காருக்கு மிக மோசமான நிலை தற்போது இந்தியாவில் ஏற்பட்டு இருக்கின்றது.