சாக்கடையில் கிடந்த 6 மாத ஆண் குழந்தை.. சுத்தம் செய்த போது பார்த்த துப்புரவு பணியாளர்கள் அதிர்ச்சி..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் சாலையில் லட்சுமி தெரு அருகே உள்ள சாக்கடைகளை இன்று காலை துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சாக்கடையில் குழந்தை போன்ற உருவம் மிதந்து கொண்டிருந்ததை பார்த்தனர். பின் சாக்கடை அருகே சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர்.
அங்கு இருந்தது பச்சிளம் ஆண் குழந்தை சடலம்.. பின்னர் துப்புரவு பணியாளர்கள் குழந்தையின் உடலை மீட்டனர். இதுக்குறித்து துப்புரவு பணியாளர்கள் ராசிபுரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதுக்குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் குழந்தை 6 பிறந்து 6 மாதம் இருக்க கூடும் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குழந்தையை வாய்க்காலில் வீசியது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.