காய்ச்சலுக்கு மருந்து குடித்த 6 வயது சிறுமி மரணம்! பின்னர் தெரிய வந்த விடயம்

தமிழக மாவட்டம் மதுரையில் சிறுமி ஒருவர் காய்ச்சல் மருந்தை குடித்த சிறிது நேரத்திலே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மயங்கி விழுந்த சிறுமி
மதுரை மாவட்டம் தத்தனேரி அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதி பிரகாஷ் (43), காவேரி. இவர்களில் 6 வயது மகள் சர்மிதாமணி.

இச்சிறுமி அப்பகுதியில் முதலாம் வகுப்பு படித்து வந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது பெற்றோர் சிறுமிக்கு காய்ச்சல் மருந்தை வீட்டில் இருந்து எடுத்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்துவிட்டதாக
அதனை குடித்ததும் சிறுமி சர்மிதாமணி மயங்கி விழுந்துள்ளார். இதனால் பதறிப்போன பெற்றோர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அவர்கள் கூறியுள்ளார். அதன் பின்னரே சிறுமி குடித்த மருந்து காலாவதியானது என்று பொலிஸார் விசாரணையில் தெரிய வந்தது.

இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலாவதியான மருந்தை குடித்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *