கையைக் கவ்விப்பிடித்த கரடி… தப்பிக்க சுவிஸ் நாட்டவர் செய்த பயங்கர செயல்
கரடி ஒன்று தன் கையைக் கவ்விப்பிடிக்க, கரடியிடமிருந்து தப்புவதற்காக, தன் கையையே வெட்டிக்கொண்டார் சுவிஸ் நாட்டவர் ஒருவர்.
கையைக் கவ்விப்பிடித்த கரடி
தாய்லாந்தின் Mueang Ngai என்னுமிடத்திலுள்ள உயிரியல் பூங்காவில் தன்னார்வலராக பணியாற்றிவந்த சுவிஸ் நாட்டவரான Stefan Claudio Specogna (32) என்பவர், கரடி ஒன்றுக்கு உணவளித்துள்ளார்.
கரடியின் தட்டில் ஸ்டீபன் உணவை வைக்க, எதிர்பாரதவிதமாக அந்தக் கரடி அவரது கையைக் கவ்விப்பிடித்துள்ளது.
தப்புவதற்காக செய்த பயங்கர செயல்
கையை இழுத்துப் பார்த்தும் கரடி கையை விடாததால், ஸ்டீபன் சட்டென தன் பாக்கெட்டில் வைத்திருந்த சிறு கத்தியை எடுத்து தன் கையை வெட்டி, தன்னை அந்தக் கரடியிடமிருந்து விடுவித்துக்கொண்டுள்ளார்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அவரது கையில் முழங்கைக்குக் கீழே அகற்றிவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், தன் கையைக் கடித்த கரடியைக் கத்தியால் குத்தாமல், தன் கையை வெட்டிக்கொண்ட ஸ்டீபனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.