பஞ்சமே இல்லாமல் வீட்டில் பணம் சேர்க்கும் கருப்பு மண் பானை; வாஸ்து கூறும் ரகசியம்

என்ன தான் நவீன உலகில் வாழந்து வந்தாலும் தற்போது பலரின் வீட்டில் மண்பானை சமையல் இருந்தே வருகிறது.

அதிகமான மக்கள் தங்கள் வீடுகளில் மண் பானைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். செம்மண்ணில் செய்யப்பட்ட செம்மையான நிறத்தில் இருக்கக் கூடிய மண் பானை தான் பெரும்பாலும் இருக்கும்.

ஆனால் கறுப்பு நிறத்தினால் செய்யப்பட்ட மண் பானையானது ஒரு சிலர் வீட்டிலேயே வைப்பார்கள். அதை வீட்டில் பயன்படுத்தலாமா மற்றும் அதனால் கிடைக்கும் பற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

மண் பானை
பல்வேறு ஆரோக்கியம் மற்றும் ஆன்மீக நலன்களுக்காக வீடுகளில் தண்ணீரைச் சேமிக்க மண் பானைகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.

தற்போது கோடைக்காலம் வருவதால் பலரும் மண் பானை வாங்கி தண்ணீர் நிரப்பி வைக்கலாம் என நினைப்பீர்கள். அதை வாங்குவதற்கு முன்னர் ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்றி அதை வாங்கவும்.

வீட்டில் கருப்பு மண் பானை வைக்கலாமா?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் மண் பானைகள் இருப்பது மிகவும் நல்லது. அவை உங்கள் வீட்டிலிருந்து எதிர்மறை ஆற்றலை அகற்றி நேர்மறை ஆற்றலை வழங்குகின்றது. பல்வேறு வாஸ்து தோஷங்களிலிருந்தும் விடுபடலாம்.

கருப்பு மண் பானைகளையும் வைக்கலாம். தீய கண்ணின் விளைவுகள் உங்கள் குடும்பத்திலும் வாழ்வில் ஏற்படாமல் இருப்பதற்காக உதவுகிறது.

அதுவே கருப்பு பானையானது உடைந்து விட்டால் ஏதோ கெட்டது நடக்கப் போகிறது என அர்த்தம்.

மேலும் கருப்பு பானையை வீட்டில் வைத்திருப்பதன் மூலம் வீட்டில் பணத்திற்கு குறை இருக்காது என பல வாஸ்த்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *