பற்றியெரியும் மத்திய கிழக்கு… செங்கடலில் மூழ்கும் பிரித்தானிய சரக்கு கப்பல்

ஈரானிய ஆதரவு ஹவுதிகளால் தாக்குதலுக்கு இலக்கான பிரித்தானிய சரக்கு கப்பல் ஒன்று செங்கடலில் மூழ்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேதமடைந்துள்ள Rubymar சரக்கு கப்பல்
ஐக்கிய அரபு அமீரகத்தின் Khor Fakkan பகுதியில் இருந்து பல்கேரியாவின் வர்ணா பகுதிக்கு புறப்பட்டு சென்ற Rubymar சரக்கு கப்பலானது ஏமன் கடற்பகுதியில் ஹவுதிகளின் தாக்குதலுக்கு இலக்கானது.

தொடர்புடைய கப்பலின் ஊழியர்கள் பத்திரமாக மீட்கபட்டாலும், அந்த கப்பலை கைவிடும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 2 வாரங்களுக்கு முன்னர் நடந்த இந்த தாக்குதலில் சேதமடைந்துள்ள Rubymar சரக்கு கப்பல் தற்போது மூழ்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய ராணுவத்தினரே, கப்பல் ஊழியர்களை மீட்டுள்ள நிலையில், கப்பலை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது என்றே பிரித்தானியாவின் UKMTO அமைப்பு குறிப்பிட்டிருந்தது.

இதனிடையே, ஹவுதிகளின் ராணுவ செய்தித் தொடர்பாளர் Yahya Saree விடுத்த அறிக்கையில், Rubymar சரக்கு கப்பல் மிக மோசமாக சேதமடைந்துள்ளதாகவும், மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

சேவையை நிறுத்திக் கொண்டது
காஸா பகுதியில் இஸ்ரேலின் கன்மூடித்தனமான தாக்குதலுக்கு பதில் அளிக்கும் வகையிலேயே செங்கடல் தாக்குதலை முன்னெடுப்பதாக ஹவுதிகள் அறிவித்திருந்தனர்.

இதனால் பெரும் எண்ணிக்கையிலான சரக்கு கப்பல்கள் பாதை மாறி பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதுடன், முதன்மையான நிறுவனங்கள் பல சேவையை நிறுத்திக் கொண்டது.

இதனால், Suzuki, Tesla, BP, Shell, Qatar Energy, DHL, FedEx, Adidas, Marks & Spencer, Next, Primark, Sainsbury’s, மற்றும் Target உள்ளிட்ட நிறுவனங்கள் பாதிப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் உலகளாவிய கப்பல் கொள்கலன்களின் கட்டணம் நவம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில் 300 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

மட்டுமின்றி, கப்பல் போக்குவரத்து மீதான ஹவுதிகளின் தாக்குதல்களை நிறுத்துவதற்காக பிரித்தானியாவும் அமெரிக்காவும் சமீப வாரங்களாக கூட்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *