இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமான கனெக்டட் கார்களை விற்பனை செய்துள்ள கார் நிறுவனம்!

கனெக்டட் கார்களை விற்பனை செய்வதில் தென் கொரியாவை சேர்ந்த கார் நிறுவனமான கியா இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. நிறுவனம் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட கனெக்டட் கார்களை விற்பனை செய்துள்ளது. கனெக்டட் கார் அம்சங்கள் கியா கார்களின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்ஸ்களுடன் மட்டுமே வழங்கப்படுகின்றன.

இருப்பினும், அவை தற்போது கியா இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு விற்பனையில் சுமார் 44 சதவீதத்தை கொண்டுள்ளன. கியா இந்தியா நிறுவனத்தால் விற்கப்பட்டிருக்கும் மொத்த கனெக்டட் கார்களில், செல்டோஸ் கார் சுமார் 65 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இந்த விற்பனை எண்ணிக்கை டெக்-டிரைவன் மொபிலிட்டி எக்ஸ்பீரியன்ஸில் குறிப்பிடத்தக்க சாதனையாக உள்ளது.

கியா இந்தியாவின் கனெக்டட் கார் வேரியன்ட்ஸ்களின் வளர்ச்சி ஈர்க்க கூடியதாக உள்ளது. நிறுவனத்தின் கனெக்டட் கார் வேரியன்ட்ஸ்கள் 30.9% CAGR-ஐ கொண்டுள்ளது. இது 2032-ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய வளர்ச்சி கணிப்பு 18 சதவீதத்தை விஞ்சியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. கியாவின் கனெக்டட் கார் விற்பனையில் செல்டோஸ் முன்னணி வகிக்கும் நிலையில், விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து வேரியன்ட் செல்டோஸ் கார்களில், கனெக்டட் கார் யூனிட்களின் விற்பனை எண்ணிக்கை 57%-ஆக உள்ளது.

இதனை தொடர்ந்து அடுத்து அதிகம் விற்பனையாகி வரும் கியா கனெக்டட் கார்களில் Carens இருக்கிறது. இந்த காரின் 31% வாடிக்கையாளர்கள் இதன் கனெக்டட் வேரியன்ட்ஸ்களை தேர்வு செய்கிறார்கள். தற்போது, டெலிமாடிக்ஸ் சோனெட்டின் 7 வேரியன்ட்ஸ்களில் மட்டுமே கிடைக்கிறது, இருப்பினும் இந்த மாடல்கள் மொத்த சோனெட் விற்பனையில் குறிப்பிடத்தக்க வகையில் 21% பங்களிப்பை வழங்குகிறது.

கியா கனெக்ட் டெலிமேட்டிக்ஸின் மிக முக்கியமான அம்சங்களில் ஹிங்கிலிஷ் கமெண்ட்ஸ், ரிமோட் விண்டோ கன்ட்ரோல், ரிமோட் எஞ்சின், ஏசி ஸ்டார்ட் மற்றும் வாலட் மோட் போன்ற அம்சங்கள் உள்ளிட்டவை அடங்கும். இந்த அம்சங்கள் வாடிக்கையாளர்களிடையே பிரபலமடைந்து வருகின்றன. இதனிடையே வாகன துறையில் கியாவின் தொழில்நுட்ப தலைமையை பற்றிப் பேசிய கியா இந்தியாவின் தலைமை விற்பனை மற்றும் வணிக அதிகாரி திரு. மியுங்-சிக் சோன் “எங்கள் பிராண்ட் அதன் டிசைன் மற்றும் டெக்னலாஜி சுப்பீரியரிட்டி ரீதியாக மார்க்கெட்டில் வேறுபடுத்தியுள்ளோம்.

இன்றைய ஹைப்பர்-கனெக்டட் உலகில், வாடிக்கையாளர்கள் தங்கள் கார்கள் தங்களுடைய வாழ்க்கை முறையுடன் தடையின்றி ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என பெரிதும் விரும்புகிறார்கள். அவர்களின் இதன் எண்ணம் டெக்னலாஜி-எனேபிள்ட் கார்களுக்கான தேவையை அதிகரிக்க செய்துள்ளது. எங்களது புதிய தலைமுறை வாடிகையாளர்களுக்காக பாதுகாப்பான மற்றும் சுவாரஸ்யமான டிரைவிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்க மேலும் பல கனெக்டெட்ட கார் அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறோம் என்றார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *