ரூ.10 லட்சத்துக்குள் நச்சுனு ஒரு கார்.. MG நிறுவனத்தின் ஆஸ்டர் மாடல் கார் எப்படி இருக்கு?

இந்தியாவில் இன்டர்நெட் கார் என்ற புரட்சியை ஏற்படுத்தியது மோரிஸ் கராஜ் நிறுவனம் தான். ஹெக்டார் கார் வாயிலாக சந்தைக்குள் நுழைந்த நிறுவனம், பல கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் போட்டியாக இருந்தது. இந்த நிலையில், நிறுவனம் தனது ஆஸ்டர் காரின் 2024 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் அடிப்படை மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.98 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனம் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஹோண்டா எலிவேட், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகன் போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி ஆஸ்டர் 2024 எடிஷன் ஸ்பிரிண்ட், ஷைன், செலக்ட், ஷார்ப் ப்ரோ, சேவி ப்ரோ ஆகிய வகைகளில் கொண்டுவரப்பட்டுள்ளது.

எம்ஜி ஆஸ்டர் ஒரு பெட்ரோல் கார் ஆகும். எனினும், இதில் பல தரத்திலான எஞ்சின் விருப்பங்கள் கிடைக்கும். 1.5-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் யூனிட் பெட்ரோல் எஞ்சின் 110bhp பவரையும் 144Nm டார்க்கையும் வெளிப்படுத்தும். அதேவேளை 1.3 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் 140bhp பவரையும், 220Nm டார்க்கையும் சக்தியாகக் கொண்டிருக்கும். 1.5 லிட்டர் எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT உடன் இணைக்கப்படுகிறது. 1.3 லிட்டர் எஞ்சின் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வருகிறது.

எம்ஜி ஆஸ்டர் 2024 காரில் காற்றுடன் கூடிய முன் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம் முகப்பு விளக்குகள், மேம்படுத்தப்பட்ட யூசர் இண்டர்ஃபேஸ், ஐ-ஸ்மார்ட் 2.0 போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

இதில் 80க்கும் மேற்பட்ட அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக எம்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐ-ஸ்மார்ட் 2.0 அம்சத்தின் வாயிலாக ஜியோ குரல் அங்கீகார அமைப்பு, வானிலை, கிரிக்கெட் அப்டேட்ஸ், கால்குலேட்டர், கடிகாரம், தேதி/நாள் தகவல், ஜாதகம், செய்தி ஆகியவற்றை வாய்ஸ் அசிஸ்டண்ட் வாயிலாக கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். மேலும், எம்ஜி ஆஸ்டர் 49 பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. இது அடாஸ் (ADAS) செயல்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த வெளியீட்டு நிகழ்வில் பேசிய எம்ஜி மோட்டார் இந்தியாவின் துணை நிர்வாக இயக்குநர் கௌரவ் குப்தா, “ஆட்டோமொபைல் தொழில்நுட்பத்தில் சமீபத்திய தயாரிப்புகளைக் கொண்டு எங்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

இந்த வாக்குறுதியைக் கடைப்பிடித்து, இந்த ஆண்டு தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் பிராண்டாக இருக்கும் எம்ஜி, ஆஸ்டர் 2024 காரை அறிமுகம் செய்து அதன் சிறப்பம்சங்கள், சிறந்த வடிவமைப்பு வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதை திருப்தியுடன் வழங்குகிறது,” என்று கூறினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *