பங்குச்சந்தையில் லாபத்தை அள்ள ஒரு சான்ஸ்.. பெயரை மாற்றிய Swiggy.. எதற்காக தெரியுமா..?!

பங்குச் சந்தையில் பட்டியலிட தயாராகும் ஸ்விக்கி நிறுவனம், தனது தாய் நிறுவனமான பண்டல் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் பெயரை ஸ்விக்கி பிரைவேட் லிமிடெட் என்று மாற்றுவதற்கான சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

இது நிறுவனத்தின் ஐபிஓ வெளியிடுவதற்கான முயற்சிகளில் முக்கிய படியாக பார்க்கப்படுகிறது. இந்த பெயர் மாற்றம் குறித்த அறிக்கையை செபி-யிடம் சமர்ப்பித்துள்ளது. இதன் மூலம் ஸ்விக்கி நிறுவனம் விரைவில் ஐபிஓ வெளியிட உள்ளது.

பண்டல் டெக்னாலஜிஸ் பெயர் மாற்றம், நிறுவனத்தின் அடையாளமான “ஸ்விக்கி” என்ற பெயருடன் கூடுதல் அங்கீகாரத்தை பெற என்று பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட இந்த உணவு டெலிவரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்விக்கி நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பங்குச் சந்தையில் பட்டியலிட திட்டமிட்டுள்ளது. இதற்காக முதலீட்டு வங்கியாளர்களை நியமித்தல், சுயாதீன இயக்குநர்களை சேர்த்தல் மற்றும் லாபகரமான நிறுவனமாக மாறுவதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறது.

ஐபிஓ பற்றிய விவரங்களை வெளியிடாவிட்டாலும், ஸ்விக்கி குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர் ஸ்ரீஹர்ஷா மஜெட்டி, டாவோஸில் ஜனவரியில் மணி கண்ட்ரோலுக்கு அளித்த பேட்டியில், “ஐபிஓவுக்கான பணிகள் நடந்து வருகின்றன. சுயாதீன இயக்குநர்களை நிர்வாக குழுவில் சேர்த்துள்ளோம். பல்வேறு தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று கூறினார்.

2023 பிப்ரவரியில், உணவு மற்றும் மளிகைப்பொருள் விநியோக தளமான ஸ்விக்கி, டெலிவரி நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சாகில் வருவா, டாஃபே தலைமை மற்றும் நிர்வாக இயக்குநர் மல்லிகா ஸ்ரீனிவாசன் மற்றும் ஷைலேஷ் ஹரிபக்தி & அசோசியேட்ஸ் தலைவர் ஷைலேஷ் ஹரிபக்தி ஆகியோரை தனது வாரியத்தின் சுயாதீன இயக்குநர்கள் அதாவது independent directors ஆக நியமித்தது.

மல்லிகா ஸ்ரீனிவாசன் பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் பதவி விலகினார், மற்றவர்கள் தொடர்ந்து வாரியத்தில் உள்ளனர். டிசம்பரில், ஸ்விக்கி நிறுவனம், FMCG துறை வல்லுநரான ஆனந்த் கிருபாலுவை தனது ஸ்விக்கி நிர்வாக குழுவில் சுயாதீன இயக்குநராக சேர்த்து, அவரையே தலைவராகவும் நியமித்தது.

இந்திய ஆன்லைன் உணவு டெலிவரி சந்தையில் ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ ஆகிய நிறுவனங்கள் முதலிடத்தில் உள்ளன. இந்த சந்தையின் 95 சதவீத வர்த்தகத்தை இவ்விரு நிறுவனங்கள் மட்டுமே வைத்துள்ளது. சொமேட்டோ லாபகரமான நிறுவனமாக மாறியுள்ள நிலையில், ஸ்விக்கி அதே திசையில் நகர துவங்கியுள்ளது.

2023 ஆம் நிதியாண்டில் ஸ்விக்கியின் வருவாய் 45 சதவீதம் அதிகரித்து ரூ. 8,625 கோடியாக உயர்ந்த நிலையில் மொத்த இவப்பு 4179 கோடி ரூபாயாக உள்ளது. சொமேட்டோவின் வருவாய் 66 சதவீதம் உயர்ந்து 7761 கோடி ரூபாயாகவும், இழப்பு 971 கோடி ரூபாயாகவும் உள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *