மாறும் பருவநிலை: சுவிஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பருவநிலை மாறிவரும் நிலையில், சில குறிப்பிட்ட பூச்சிகளால் ஏற்படும் நோய்களைத் தடுப்பதற்காக, தடுப்பூசி போட்டுக்கொள்ள சுவிட்சர்லாந்து அரசு வலியுறுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுவிட்சர்லாந்தில் வெப்பம் அதிகரிக்கத்துள்ளதைத் தொடர்ந்து, உன்னிப்பூச்சிகள் எனும் ஒருவகை பூச்சிகள் அதிகரிக்கத் துவங்கியுள்ளன.
தடுப்பூசி
சுவிட்சர்லாந்தின் வாட் மாகாண மருந்தகத் துறையினரான கிறிஸ்டோஃப் பெர்கர் என்பவர், செல்லப்பிராணிகள் வைத்திருக்கும் பலர் தங்கள் நாய்களின் உடலில் இந்த உன்னிப்பூச்சிகள் உருவாகத் துவங்கியுள்ளதைக் கண்டுப்பிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆகவே, இந்த உன்னிப்பூச்சிகளால் உருவாகும் நோய்களைத் தடுப்பதற்காகக் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தும் அவர், தடுப்பூசியின் விலை 80 சுவிஸ் ஃப்ராங்குகள் என்றும், அந்த தடுப்பூசி மருந்தகங்களிலேயே கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன் வெப்பமான காலப்பகுதிகளில் வெளியில் செல்வோர் கவனமாக இருக்குமாறும், உடலை முழுமையாக மறைக்கும் மற்றும் வெளிர் வண்ண உடைகள் உடுத்திக்கொள்ளுமாறும், பூச்சிகளை துரத்துவதற்காக ஸ்பிரேயை பயன்படுத்துமாறும் மருந்தகத் துறையினரான கிறிஸ்டோஃப் பெர்கர் ஆலோசனை வழங்கியுள்ளார்.