போரால் உருவான காமெடி கதை… இயக்குனராக மாறிய சிவாஜி : எந்த படம் தெரியுமா?

போரால் உருவான காமெடி கதை… இயக்குனராக மாறிய சிவாஜி : எந்த படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் நடிப்பு பல்கலைகழகம் என்று பெயரெடுத்த சிவாஜி கணேசன், நடிப்பால் அனைவரையும் அசத்தக்கூடியவர் என்றாலும் அவர் இயக்குனராகவும் முத்திரை பதித்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

தமிழ் சினிமாவில் நடிப்பு பல்கலைகழகம் என்று பெயரெடுத்த சிவாஜி கணேசன், நடிப்பால் அனைவரையும் அசத்தக்கூடியவர் என்றாலும் அவர் இயக்குனராகவும் முத்திரை பதித்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்

நாடக நடிகராக இருந்த 1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாகிக்கொண்டார். நடிப்புக்கு இலக்கனமாகவும், பல நடிகர்களுக்கு இன்ஸ்பிரேஷனாகவும் இருக்கும் சிவாஜி இயக்குனராக ஒரு நாடகத்தை இயக்கியுள்ளார்.

நாடக நடிகராக இருந்த 1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாகிக்கொண்டார். நடிப்புக்கு இலக்கனமாகவும், பல நடிகர்களுக்கு இன்ஸ்பிரேஷனாகவும் இருக்கும் சிவாஜி இயக்குனராக ஒரு நாடகத்தை இயக்கியுள்ளார்.

1965-ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போர் நடைபெற்றது. இந்த போரில் காயமடைந்த வீரர்களுக்கு நிதி வசூலிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் கலை நிகழ்ச்சி நடத்தி தர வேண்டும் என்று, நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் தமிழக அரசு கேட்டுக்கொண்டது. வெறும் கலை நிகழ்ச்சி என்றால் சரியாக இருக்காது. ஒரு நாடகத்துடன் சேர்த்து நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்று யோசித்த சிவாஜி, சித்ராலயா கோபுவிடம் சொல்லி ஒரு நாடகத்தை எழுதுமாறு கூறியுள்ளார்.

சிவாஜியின் பேச்சை கேட்டு சித்ராலயா கோபு எழுதிய நாடகம் தான் கலாட்டா கல்யாணம். 4 மகள்களை பெற்ற ஒரு சோம்பேறி தந்தை, தனது மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க எந்த முயற்சியும் எடுக்காத நிலையில், தனது 2-வது மகள் காதலிக்கும் நாயகனிடம் மீதமுள்ள எனது 3 மகள்களுக்கு மாப்பிள்ளை பார்த்தால், உங்கள் திருமணத்தை நான் நடத்துகிறேன் என்று சொல்வார். அதன்பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் இந்த நாடகம்.

நாடகத்தை படித்து பார்த்த சிவாஜிக்கு, மிகவும் பிடித்திருந்தது. இதனால் இந்த நாடகத்தை நடத்த முடிவு செய்த அவர், அதை தானே இயக்கவும் முடிவு செய்தார். இந்த நாடகத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டரும், எப்படி நடந்துகொள்ள வேண்டும், என்ன வசனம் பேச வேண்டும் என்று சிவாஜி முடிவு செய்து சிறப்பாக நாடகத்தை நடத்தி முடித்துள்ளார். இந்த நாடகத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது

பின்னாளில் இந்த நாடகம் கலாட்டா கல்யாணம் என்ற அதே பெயரில் படமாக்கப்பட்டது. சி.வி.ராஜேந்திரன் இயக்கிய இந்த படத்தில், சிவாஜி, ஜெயலலிதா, மனேரமா, நாகேஷ், சோ, வி.எஸ்.ராகவன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 1968-ம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *