வீடுகளில் சோலார் பேனல் அமைத்து.. கோடிகளில் வருவாய் ஈட்டும் நிறுவனம்!

வீடுகளில் சோலார் பேனல்கள் அமைப்பதில் நாடு முழுவதும் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது சோலார்ஸ்கொயர். இந்த நிறுவனம் எப்படி வளர்ச்சி அடைந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஐஐடி மும்பையில் பயின்ற நீரஜ் ஜெயின், ஸ்ரேயா மிஸ்ரா மற்றும் புனே பல்கலைகழகத்தில் படித்த நிகில் நாஹர் ஆகிய மூன்று பேர் இணைந்து உருவாக்கிய நிறுவனம் சோலார் ஸ்கொயர் (SolarSquare). இந்த நிறுவனம் 8 மாநிலங்களில் 16 நகரங்களில் ஆயிரக்கணக்கான வீடுகளில் சோலார் பேனல்களை நிறுவியுள்ளது.

நீரஜ் ஜெயின் மற்றும் நிகில் நாஹர் ஆகியோர் 2015ஆம் ஆண்டு சோலார்ஸ்கொயர் நிறுவனத்தை தொடங்கினர். பெரு நிறுவனங்களுக்கு சோலார் பேனல் அமைக்கும் நிறுவனமாக 100 கோடி மதிப்புள்ள நிறுவனமாக இது வளர்ந்தது. இந்நிலையில் வீடுகளுக்கு சோலார் பேனல் அமைக்கும் திட்டம் இவர்களுக்கு உதயமானது நீரஜ் ஜெயின் அவரது மனைவியும் ஏற்கனவே ஒரு ஸ்டார்ட் அப்பை நிறுவியவருமான ஸ்ரேயா மிஸ்ராவை அணுகினார். இப்படி தான் சோலார்ஸ்கொயர் நிறுவனம் பி2சி நிறுவனமாக உருவெடுத்தது.

பெரு நிறுவனங்களில் பெரிய ஆர்டர்களை பெற்று பணியாற்றியவர்கள் வீடு வீடாக சென்று தொழில் செய்ய முடிவை எடுத்தனர். சராசரி மக்கள் மின்சார கட்டண உயர்வை சமாளிக்க முடியாமல் ,மாற்று வழிகளை ஆய்வு செய்து சோலார் பேனல் என்பது சூரியசக்தி மின் ஆற்றலை பயன்படுத்த தொடங்கியதால் இவர்களின் தொழிலும் வளர்ச்சி அடைந்தது.

ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு தேவை இருக்கும் எனவே அதற்கு ஏற்றார் போல சோலார் கிட்களை வடிவமைத்துள்ளனர். கிட்டதட்ட மூன்று ஆண்டுகளில் சோலார்ஸ்கொயர் நிறுவனம் இந்தியாவின் முன்னணி நிறுவனமானது. 10,000 தனி வீடுகள் மற்றும் 100 காலனிகளில் இவர்கள் சோலார் பேனல்களை நிறுவியுள்ளனர். தற்போது 200 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனமாக உயர்ந்துள்ளனர்.

சோலார் பேனல்களை அமைப்பவர்களுக்கு அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான பணிகளையும் சோலார்ஸ்கொயர் நிறுவனமே மேற்கொள்கிறது. இதனால் மக்களின் விருப்பமான நிறுவனமாக மாறியுள்ளது.

அடிக்கடி புயல் , காற்று ஆகியவை ஏற்பட இந்தியாவில் சோலார் பேனல்களின் பராமரிப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே சோலார் கேர் என்ற திட்டத்தையும் இந்நிறுவனம் செயல்படுத்துகிறது. அடிக்கடி சோலார் பேனல்களை தூய்மைபடுத்துவது, சர்வீஸ் செய்வது போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் சோலார் பேனல்களின் ஆயுள்காலம் நீட்டிக்கப்படும். எனவே அந்த சேவையும் வழங்குவதால் நம்பகமான மற்றும் பிடித்தமான நிறுவனமாக சோலார்ஸ்கொயர் மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறது.

இந்தியாவில் சோலார் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசும் கரியமிலவாயு வெளியீட்டை குறைக்க மாற்று வழிகளில் மின்சாரத்தை தயாரிக்க முனைப்பு காட்டி வருகிறது.எனவே மக்கள் சோலார் மின் ஆற்றலை பயன்படுத்துவதற்கு மானியம் வழங்கி ஊக்கப்படுத்துகிறது.எனவே சோலார் மின் ஆற்றல் தொடர்பான துறை இந்தியாவில் வளர்ந்து வரும் ஒரு துறை என்பதால் இந்நிறுவனமும் வளர்ச்சி அடையும் என்பதில் ஐயமில்லை.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *