“இந்திய அணிக்கு நெருக்கடி வர்றப்ப.. எப்பவும் காப்பாத்தறது இந்த 2பேர்தான்” – கம்மின்ஸ் புகழ்ச்சி
2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர்கள் ஸ்மித் மற்றும் வார்னர் சிக்கிய பொழுது, ஆஸ்திரேலியா கிரிக்கெட் மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளானது.
இப்படியான நேரத்தில் ஆஸ்திரேலியா அணியை அப்போது புதிதாக வந்த தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கரை ஏற்றி காப்பாற்றினார். அவர்களது அணி இங்கிலாந்தில் ஆசஸ் தொடரை அப்பொழுது தக்கவைத்து, ஆஸ்திரேலியாவில் வைத்து வென்றது. மேலும் யுனைடெட் அரபு எமிரேடில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இதற்குப் பிறகு பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதற்கு பிறகு, ஆஸ்திரேலியா அணியின் விளையாட்டின் தரம் அதிகரித்ததோடு, அவர்கள் வழக்கம் போல் போராட்ட குணத்தை வெளிப்படுத்தினாலும், எதிர் அணிகளிடம் வம்பு செய்வதை கைவிட்டார்கள். அணி மிகவும் ஒற்றுமையாக மீண்டும் மாறியது. இதற்கு மிக முக்கியமாக கேப்டன் பேட் கம்மின்ஸ் இருக்கிறார்.
தன் அணி வீரர்களுக்காக பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் உடன் முரண்பட்டு, அவர் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து வெளியேற, அணியைக் கட்டுக்கோப்பாக வழி நடத்தி வந்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் வடிவத்தில் ஆஸ்திரேலியா அணியை சாம்பியனாக மாற்றியிருக்கிறார். மேலும் இங்கிலாந்தில் வைத்து ஆசஸ் தொடரை தக்க வைத்திருக்கிறார்.
அவர் தலைமையில் புதிய அணுகுமுறையில் விளையாடும் ஆஸ்திரேலியா அணிக்கு வெளியில் இருந்து விளையாட்டை தாண்டி நல்ல பெயர்கள் கிடைக்க ஆரம்பித்து இருக்கிறது. உஸ்மான் கவஜாவிற்காக ஷாம்பெய்ன் கொண்டாட்டத்தை நிறுத்தியது, ஸ்லெட்ஜிங்கை அணியில் தடை செய்தது என அவரது நடவடிக்கைகள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது.