ஒரு நாள் கூத்து, கோடியில் வருமானம்.. இசைக்கலைஞர்களை பண மழையில் நனைய வைத்த முகேஷ் அம்பானி..!

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய பிரமாண்ட விழா, குஜராத் மாநில ஜாம்நகரில் மூன்று நாட்கள் களைக் கட்டிய நிலையில், இந்த விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பிரபல இசைக்கலைஞர்கள் முக்கியப் பங்கு வகித்தனர்.
இந்த வகையில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் விழாவில் பாடி அசத்திய இசைக்கலைஞர்களை முகேஷ் அம்பானி பண மழையில் நனைய வைத்தார்.
Rihanna: உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் பெண் இசைக்கலைஞரான ரிஹானா, பொதுவாக ப்ரைவேட் நிகழ்ச்சிகளுக்கு 1.5 மில்லியன் முதல் 8 மில்லியன் டாலர் வரை வசூலிக்கும் இவர், அம்பானி வீட்டுச் சிறப்பு நிகழ்ச்சிக்காக அதிகபட்சமாக 8-9 மில்லியன் டாலர் வரை வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
Diljit Dosanjh: பஞ்சாபி பாடலுக்குப் புகழ்பெற்ற திலிஜித் தோசஞ்ச், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்ச்சிக்காகச் சுமார் ரூ.4 கோடி வசூலித்தார்.
Akon: இந்தியாவுடன் தனது சம்மக் சலோ பாடல் மூலம் பெரும் புகழைப் பெற்ற அக்கோன், ப்ரைவேட் நிகழ்ச்சிகளுக்குப் பொதுவாக $300,000 முதல் $499,000 வரை வசூலிப்பார். இந்த விழாவில் ஷாருக்கான் கான் உடன் இணைந்து Akon பாடி ஆடினார்.
Arijit Singh: காதல் பாடல்களுக்குப் பெயர் பெற்ற அரிஜித் சிங், இந்த விழாவிற்குத் தனது இனிமையான குரலில் பாடி பலரையும் மெய்சிலிர்க்க வைத்தார். இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் இசைக்கலைஞர்களில் ஒருவரான இவர், பொதுவாக ப்ரைவேட் நிகழ்ச்சிகளுக்குச் சுமார் ரூ.5 கோடி வசூலிப்பார்.
Shreya Ghoshal: ஸ்ரேயா கோஷல், ப்ரைவேட் நிகழ்ச்சிகளுக்கான அவரது சரியான கட்டணம் வெளிப்படுத்தப்படவில்லை என்றாலும், அவர் ஒரு பாடலுக்கு ரூ.25 லட்சம் வசூலிப்பார் எனத் தெரிகிறது.
இப்படி லக்கி அலி, பிரீதம், உதித் நாராயண், B Praak, தண்டேகர், ஷான், சுக்விந்தர் சிங், மோஹித் சவுகான், மோனாலி தாக்கூர், நீதி மோகன் மற்றும் வியன்னா சிம்பொனி இசைக்குழு எனப் பலரும் பல லட்சத்தைச் சம்பளமாகப் பெற்றுள்ளனர்.