மன்னர் சார்லசை கவனித்துக்கொள்ளும் சர்ச்சைக்குரிய சிகிச்சைமுறையைப் பின்பற்றும் மருத்துவர்; எழுந்துள்ள விமர்சனம்

மன்னர் சார்லஸ் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மருத்துவர், சர்ச்சைக்குரிய சிகிச்சைமுறைகளைப் பின்பற்றுபவர் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சர்ச்சைக்குரிய சிகிச்சைமுறையைப் பின்பற்றும் மருத்துவர்
மன்னர் சார்லசை கவனித்துக்கொள்வதற்காக அமைக்கபட்டுள்ள மருத்துவர் குழுவின் தலைவராக இருப்பவர் Dr மைக்கேல் டிக்ஸன் (Dr Michael Dixon) என்னும் மருத்துவர்.

டிக்சன், அக்யு பங்க்சர், ஆயுர்வேதம், ஓமியோபதி போன்ற complementary medicine மற்றும் alternative therapy என்னும் மருத்துவமுறைகளை ஆதரிப்பவர், மன்னரும் அப்படித்தான் என்கிறார் ராஜ குடும்ப செய்தியாளர்களில் ஒருவரான லாரா (Laura Bundock) என்பவர்.

மேலும், தன் நோயாளிகளுக்கு பாதிரியார்களைக் கொண்டு ஜெபம் செய்வதன் மூலமும், மூலிகை வைத்தியம் மூலமும் சிகிச்சையளிப்பதற்கும் டிக்சன் ஆதரவளிப்பவர் என்பதால், அவரை மன்னருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் குழுவுக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விடயம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இளவரசரே நீங்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளீர்கள்
விடயம் என்னவென்றால், மன்னர் சார்லசும் இத்தகைய சிகிச்சைகளை ஆதரிப்பவராம். 2004ஆம் ஆண்டு, மருத்துவத்துறை நிபுணரான பேராசிரியர் மைக்கேல் (Michael Baum) என்பவர், அப்போது இளவரசராக இருந்த சார்லசுக்கு செய்தித்தாள்களில் வெளியாகும் வகையிலான கடிதம் (open letter) ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், மதிப்பிற்குரிய இளவரசர் அவர்களே, நீங்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளீர்கள் என்பதை மரியாதையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு சில விடயங்களை எழுதியிருந்தாராம்.

மன்னர், புற்றுநோயை குணமாக்கும் என நிரூபிக்கப்படாத சிகிச்சைகளுக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டியிருந்த அவர், எனிமா கொடுப்பதற்கு காபியை பயன்படுத்துதல், புற்றுநோய்க்கு மருந்தாக கேரட் ஜூஸ் கொடுத்தல் ஆகிய விடயங்களுக்கு மன்னர் ஆதரவளிப்பதாகவும் கூறியிருந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு, நிரூபிக்கப்படாத சிகிச்சைகளை பரிந்துரைக்கும்போது, தயவு செய்து உங்கள் அதிகாரத்தை மிகவும் கவனமாக செயல்படுத்துமாறு உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் தனது கடிதத்தில் எழுதியுள்ளார் மைக்கேல்.

இதற்கிடையில், மன்னருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் குழுவின் தலைவராக டிக்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளது தொடர்பில் எழுந்துள்ள விமர்சனத்துக்கு பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் சார்பில் பதில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், Dr டிக்சன், ஓமியோபதி சிகிச்சை புற்றுநோயைக் குணமாக்கும் என நம்பவில்லை என்றும், அவர், complementary சிகிச்சை என அழைக்கப்படும் சிகிச்சை முறைகள், வழக்கமாக நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் அலோபதி சிகிச்சையுடன் கூட சேர்த்து இணை மருந்துகளாக கொடுக்கப்படலாம் என்று நம்புகிறார் என்றும், மட்டுமல்ல, அவை பாதுகாப்பானவை, முறையானவை மற்றும் நிரூபணமானவை என்றால் மட்டுமே அவற்றை பயன்படுத்தலாம் என்றே நம்புகிறார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *