அ.இ.அ.தி.மு.க. இறுதி கட்ட பட்டியல் வெளியீடு..!

ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளதால் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய தீவிரம் காட்டி வருகின்றன. நேற்று முன்தினம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

மேலும் தே.மு.தி.க.விற்கு திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர், விருதுநகர், மத்திய சென்னை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதேபோல எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும் ஒதுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க.வின் 17 பேர் கொண்ட 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

இந்த அறிவிக்கப்பட்ட இரண்டு கட்ட வேட்பாளர்களிலும் இரண்டு சிறுபான்மையினர், ஒரே ஒரு பெண் வேட்பாளர் உள்ளனர். அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்ட 33 வேட்பாளர்களில் ராயபுரம் மனோ, ஜெயவர்தன், சரவணன் மற்றும் குமரகுரு ஆகியோரைத் தவிர 29 பேரும் புதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதி வேட்பாளர்கள் பட்டியல்:

1) வேலூர் – டாக்டர் பசுபதி.

2) தருமபுரி – டாக்டர் அசோகன்.

3) திருவண்ணாமலை – எம்.கலியபொருமாள்.

4) கள்ளக்குறிச்சி – ரா. குமரகுரு.

5) நீலகிரி (தனி) – லோகேஷ் தமிழ்ச்செல்வன்.

6) திருப்பூர் – அருணாச்சலம்.

7) பொள்ளாச்சி – அப்புசாமி என்ற கார்த்திகேயன்.

8) மயிலாடுதுறை – பாபு.

9) ஸ்ரீபெரும்புதூர் – டாக்டர் பிரேம் குமார்.

10) தூத்துக்குடி – சிவசாமி வேலுமணி.

11) சிவகங்கை – சேகர்தாஸ்.

12) பெரம்பலூர் – சந்திர மோகன்.

13) திருநெல்வேலி – சிம்லா முத்துசோழன்.

14) கோவை – சிங்கை ராமச்சந்திரன்.

15) கன்னியாகுமரி – பசலியன் நசரேத்.

16) திருச்சி – பி. கருப்பையா.

17) புதுச்சேரி – தமிழரசன்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *