தமிழ்நாட்டை காப்பாற்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வெல்ல வேண்டும்..!

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அ.தி.மு.க கூட்டணியை நம்பி இல்லை, கூட்டணி இல்லை என்றாலும் சொந்தக்காலில் நிற்போம் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
அ.தி.மு.க கூட்டணியை நம்பி இல்லை, கூட்டணி இல்லை என்றாலும் சொந்தக்காலில் நிற்போம். இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு அ.தி.மு.க முக்கிய காரணம். டெல்லியில் ஊழல் நடந்ததா, இல்லையா எனத் தெரியவில்லை. தவறு நடந்தால் கைது செய்யட்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் கடுமையான ஊழல் நிலவுகிறது. புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் கட்சி வளரும். நானும் ஒருகாலத்தில் புதுமுகம் தானே. பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வென்றால்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும்.
ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியை ஆதரிப்பதுதான் பாமக என்று எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். ராமதாஸ் பாஜகவுக்கு பூஜ்யம் மதிப்பெண் தருவதாக கூறிவிட்டு, இப்போது அங்கேயே கூட்டணி வைத்துள்ளார். வேடந்தாங்கல் பறவை போல பாமக அடிக்கடி கூட்டணி மாறுகிறது. வேடந்தாங்கல் பறவை மாதிரி அடிக்கடி கூட்டணி மாறுகிறவர் அன்புமணி ராமதாஸ். வேடந்தாங்கல் பறவைகள், ஏரியில் தண்ணீர் நிரம்பி இருக்கும்போது வரும். தண்ணீர் வற்றினால் போயிடும். அது மாதிரிதான் அவர். என்று தெரிவித்தார்.