விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கழன்று விழுந்த டயர்., வெளியான காணொளி

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

யுனைடெட் ஏர்லைன்ஸ் (United Airlines) விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் ஒரு டயரை இழந்தது.

ஆனால் இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது வியாழன் அன்று 235 பயணிகள் மற்றும் 14 பணியாளர்களுடன் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து ஜப்பானுக்கு புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட சில நொடிகளில் தரையிறங்கும் கியரின் இடது புறத்தில் இருந்த ஆறு சக்கரங்களில் ஒன்று கழன்று விழுந்தது.

எச்சரிக்கையாக இருந்த விமானி அவசரமாக விமானத்தை தரையிறக்க வேண்டியதாயிற்று. விமானம் லாஸ் ஏஞ்சல்ஸில் பத்திரமாக தரையிறங்கியது.

அதிர்ஷ்டவசமாக விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு விபத்து ஏதும் ஏற்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://twitter.com/rawsalerts/status/1765859643031490742

 

இதுபோன்ற சமயங்களில் பாதுகாப்பாக தரையிறங்கும் வகையில் விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இருப்பினும், விமானத்தின் டயர் சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் கார்கள் மீது விழுந்தது. இதனால் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *