ஜேர்மனியில் கால்வைக்கும் முன்பே நாடுகடத்தப்பட்ட வெளிநாட்டவர்…
ஜேர்மனியில் பணி செய்வதற்காக துருக்கி நாட்டவர் ஒருவர் விசாவுக்கு விண்ணப்பிக்க, அவர் ஏற்கனவே ஜேர்மனியிலிருந்து நாடுகடத்தப்பட்டுவிட்டதாக அவருக்கு கிடைத்த பதில் அவரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜேர்மனியில் கால்வைக்கும் முன்பே நாடுகடத்தப்பட்ட வெளிநாட்டவர்…
மெக்கானிக்கல் எஞ்சினியரான முஸ்தபா (Mustafa Aydin), கடந்த ஆண்டு, அதாவது, 2023ஆம் ஆண்டு, ஆகத்து மாதம்,ஜேர்மன் நிறுவனம் ஒன்றில் பணிக்கு விண்ணப்பிக்க, அவரது விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உடனே விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார் அவர்.
ஆனால், முஸ்தபாவுக்கு பெடரல் வெளியுறவு அலுவலகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. நீங்கள் 2001ஆம் ஆண்டே ஜேர்மனியிலிருந்து நாடுகடத்தப்பட்டுவிட்டீர்கள். ஐந்து நாட்களுக்குள் உங்கள் தரப்பு விளக்கத்தை எங்களுக்குத் தெரிவியுங்கள் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கவே அதிர்ந்துபோனார் முஸ்தபா.
ஜேர்மனியில் கால்வைத்ததே இல்லையாம்
ஆனால், தான் இதுவரை ஜேர்மனியில் கால்வைத்ததே இல்லை என்கிறார் முஸ்தபா. 2001ஆம் ஆண்டு, தான் பல்கலையில் படித்துக்கொண்டிருந்ததாகவும், 2006ஆம் ஆண்டுதான் பாஸ்போர்ட்டே பெற்றதாகவும் தெரிவிக்கிறார் அவர்.
தனது புகைப்படம், கைரேகை முதலான அடையாளங்களை ஜேர்மனிக்கு அனுப்பிவிட்டு, நாடுகடத்தப்பட்டது தான்தானா என்பதை உறுதிசெய்யுமாறு கேட்டு பதிலுக்காக காத்திருக்கிறார் முஸ்தபா.