பஃபர் மீன்களை பரிசாக வழங்கிய நண்பர்: சரியாக சுத்தப்படுத்தி சமைக்க தெரியாததால் காத்திருந்த சோகம்

பிரேசிலில் நண்பர் பரிசளித்த கோள மீனை சமைத்து சாப்பிட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நண்பர் வழங்கிய பரிசு
பிரேசில் நாட்டின் எஸ்பிரிட்டோ சாண்டா(Espirito Santa) பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய நண்பன் மேக்னோ செர்ஜியோ கோம்ஸ் என்பவருக்கு பஃபர்ஃபிஷ்(puffer fish) அல்லது கோளமீன் என அழைக்கப்படும் மீனை பரிசளித்துள்ளார்.

அத்துடன் நண்பர்கள் இருவரும் சேர்ந்து அதை சமைத்து லெமன் ஜூஸ் உடன் சேர்த்து சாப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து சிறிது நேரத்திலேயே இருவருக்கும் வாயில் உணர்ச்சி இல்லாமல் போய் உள்ளது, இதனால் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட மேக்னோ செர்ஜியோ கோம்ஸ்(Magno Sergio Gomes) நண்பருடன் சேர்ந்து மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

அங்கு அவருக்கு 8 நிமிடத்திற்கு மாரடைப்பு வேறு ஏற்பட்டுள்ளது. உயிர் ஆதரவு சிகிச்சைகள் வழங்கப்பட்டும் கோளமீன் போன்ற சில கடல் வாழ் உயிரினங்களில் மட்டும் காணப்படும் tetrodotoxin என்ற விஷத்தன்மை உடல் முழுவதும் ஏறி மேக்னோ செர்ஜியோ கோம்ஸின் உயிரிழப்பை உறுதி செய்தது.

அவரது நண்பர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார், ஆனால் உடல் முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கோளமீன் அல்லது பஃபர்ஃபிஷ்
உலகின் பல பகுதிகளில் மிகவும் சுவையான உணவாக பஃபர்ஃபிஷ்(கோளமீன்) உட்கொள்ளப்படுகிறது. ஆனால் அதில் உள்ள விஷத்தன்மை மற்ற விசங்களை விடவும் கொடியது என்பது பிரபலம் இல்லாமல் உள்ளது.

இந்த பஃபர்ஃபிஷ்(கோளமீன்) உட்கொள்வதற்கு முன்னதாக அதற்கான முறையான சுத்தப்படுத்துதல் மற்றும் சமைத்தல் முறையை பின்பற்ற வேண்டும்.

இந்த சுத்தப்படும் முறை மற்றும் சமைத்தல் முறை சரியாக தெரியாத நபர்கள் இத்தகைய பாதிப்புகளுக்குள் சிக்கி கொள்கின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *