ஒரு நெல்லிக்காய் இருந்தால் போதும்; உடனே எடையை குறைத்திடலாம்

நெல்லிக்காய் குடல் ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் மிகவும் நல்லது. எனவே அது உடல் எடையை குறைக்க உதவுகிறது என்பதும் பலரும் அறிந்த விடயமே.
நெல்லிக்காயில் புளிப்பு மற்றும் கசப்பு சுவை இருப்பதால் சாப்பிடுவது சற்று கடினமாக இருக்கும். நெல்லிக்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே இது ஒருவரை பசி எடுக்க விடாமல் வைத்திருக்கும்.
நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. அந்தவகையில் உடல் எடையை குறைக்க இது எப்படி உதவுகிறது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
பெரிய நெல்லிக்காய்- 1 நறுக்கியது
இஞ்சி- 1 துண்டு (தோல் நீக்கியது)
கறிவேப்பிலை- சிறிதளவு
செய்முறை
முதலில் நெல்லிக்காய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.
பின் தினமும் காலையில் தண்ணீர் அல்லது மோருடன் கலந்து குடித்து வரலாம்.
ஏற்படும் நன்மைகள்
தலைமுடி உதிர்வது நிற்கும்.
முடி நரைத்தல் நிற்கும்.
கண்கள் மற்றும் பற்களில் பிரச்சினைகள் எற்படாது.
இரத்த அழுத்தம் குறையும்.
நீரிழிவு நோயாளிகள் இதை குடிக்கலாம்.
செரிமான பிரச்சினைகள் தீரும்.
வயிற்றுவலி குறையும்.
மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் குறையும்.
மேலும் நெல்லிக்காயை உட்கொள்ளும் போது, செரிமானத்தில் உங்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ, அதை உட்கொள்வதை தவரித்துக்கொள்வது நல்லது.