புத்தாண்டு பார்ட்டிக்கு பிறகு ஹாங்கோவர் குணமாக உங்க கிச்சனில் இருக்கும் இந்த 4 பொருட்களே போதுமாம்…!
2024- ஆம் ஆண்டு வந்து விட்டது, புத்தாண்டு என்பது உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாடுவதற்கான தருணமாகும். மக்கள் தங்களுக்கு பிடித்த ஆடைகளை அணிந்துகொண்டு, கொண்டாட்டங்களில் கலந்து கொள்கிறார்கள்.
துரதிர்ஷ்டவசமாக கொண்டாட்டங்கள் என்றாலே மது இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது, விசேஷ சமயங்களில் மது அருந்துவது வேடிக்கையாக இருந்தாலும் அதன் பின்விளைவுகள் தான் மோசமானது.
ஒவ்வொரு முறையம் மது அருந்தும் போது மக்கள் துடிக்கும் தலைவலி மற்றும் ஒரு பெரிய ஹேங்கொவருடன் எழுந்திருக்கிறார்கள். ஆனால், நீங்கள் 2024 ஆம் ஆண்டை படுக்கையில் கழிக்க விரும்பவில்லை என்றால், புத்தாண்டை உங்கள் முகத்தில் புன்னகையுடன் கொண்டாட உதவும் எளிய மற்றும் பயனுள்ள தீர்வுகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மோசமான ஹேங்கோவரை சரிசெய்ய வீட்டு வைத்தியம் உதவும். பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர்கள் ஹாங்கோவரை குணப்படுத்தும் சமையலறைப் பொருட்களைப் பற்றி கூறியுள்ளார்கள். அவை என்னவென்பதை மேற்கொண்டு பார்க்கலாம்.
இஞ்சி
இஞ்சி பல நூற்றாண்டுகளாக நமது உணவிலும், மருத்துவத்திலும் தவிர்க்க முடியாத பங்கைக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் அதன் சுவையும், அதிலுள்ள மருத்துவ குணங்களும்தான். இதிலுள்ள மருத்துவ பண்புகள் செரிமான உதவி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். அதன் தெர்மோஜெனிக் பண்புகள் கொழுப்பை திறம்பட எரிக்க உதவுகிறது.
புதினா
புதினா அதன் தனித்துவமான வாசனைக்கு பெயர் பெற்றது. வெறும் புத்துணர்ச்சியை விட, புதினாவில் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவும் கூறுகள் உள்ளன. இது ஆல்கஹால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பை குறைக்கும்.