பாலைவனத்தில் வீடு… மறைந்திருக்கும் ஆபத்தான பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப்!
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் நெட்டிசன்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. மகுடிக்கு மயங்கிய பாம்பு போல நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களை வெறித்தனமாகத் தீர்த்து வருக்கிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாலைவனத்தில் இருக்கும் வீட்டுக்குள் புகுந்த ஆபத்தான பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஷார்ப் பாஸ்!
ஆப்டிகல் இல்யூஷன் என்பது இன்று நேற்று உருவானது அல்ல. கி.மு. 3,500 ஆண்டுகளுக்கு முன்னர், பண்டைய கிரேக்கத்தில் ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்கள் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் உள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். கி.மு 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாடில், ஓடும் நதியைப் பார்க்கும்போது அருகே இருக்கும் நிலப்பரப்பு நகர்வதைப் போற்ற தோற்றத்தை ஆப்டிகல் இல்யூஷனாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் உள்ள பழங்கால சிற்பங்கள் பலவும் ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் பார்க்கலாம்.