மூணு, நாலாக மடிக்கக்கூடிய வீடு.. இப்போ இதுதான் டிரென்ட்.. விலை என்ன தெரியுமா..?
ஏறிவரும் விலையேற்றம் காரணமாக உலகம் முழுவதும் மக்களுக்கு தங்களுக்கென ஒரு சொந்த வீடு வாங்குவது என்பது இன்னும் கனவாகவே உள்ளது. எனவே, கட்டுமானத்தில் புதிய தொழில்நுட்பம், புதிய உக்தி ஆகியவற்றின் மூலம் சொந்தமான வீடு கனவுகள் எளிதாகி வருகிறது.
சமீபத்தில், அமெரிக்காவில் உள்ள 23 வயதான டிக்டாக்கர், அமேசானிலிருந்து வாங்கிய தனது புதுமையான புதிய வீட்டைக் காண்பிக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது அமெரிக்காவை தாண்டி உலகம் முழுவதும் பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது.
இந்த வீடியோவில் அமேசானில் நான் இந்த வீட்டை வாங்கினேன் என டிக்டாக் விடியோவில் லாஸ் ஏஞ்சலீஸை சேர்ந்த ஜெப்ரி பிரையண்ட் என்பவர் கூறியுள்ளார். $26,000 அதாவது ரூ.21,37,416 மதிப்புள்ள இந்த வீடு 16க்கு 20 சதுர அடி பரப்பைக் கொண்டுள்ளது.
இந்த சின்னஞ்சிறிய வீட்டில் ஒரு ஷவருடன் கூடிய டாய்லெட், கிச்சன், லிவ்விங் ஏரியா, ஒரு படுக்கையறை உள்ளது. தனது தாத்தா தந்த பணத்தில் இந்த வீட்டை ஜெப்ரி பிரையண்ட் வாங்கியுள்ளார். அவரைப் போலவே பலரும் ஆன்லைனில் இதுபோன்ற வீடுகளை வாங்கி வருகின்றனர்.
அதிகரித்து வரும் வாடகையை சமாளிப்பதற்கு இதுபோன்ற நவீன வீடுகள் வசதியாக இருக்கிறது. இந்த வீடு எனக்கும் எனது நாய்க்கும் மிகவும் பிடித்திருக்கிறது. இதை பலருக்கும் பரிந்துரைப்பேன் என்கிறார் பிரையண்ட். இருப்பினும் நெட்டிசன்கள் பலர் இதை வீண் செலவு என விமரித்து வருகின்றனர்.
இதற்கிடையில், பிரையண்ட் நியூயார்க் போஸ்ட்டிடம் கூறுகையில், ஒரு யூடியூபர் தனது அமேசான் வீட்டை அன்பாக்ஸ் செய்வதைப் பார்த்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் நான் அதை வாங்குவதற்காக அமேசான் வலைத்தளத்துக்குச் சென்றேன் என்றார்.
அவர் இன்னும் வீட்டின் அனைத்து மின்சார மற்றும் பிளம்பிங் வேலைகளையும் செய்ய வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் அல்லது வீடற்றவர்களை எதிர்கொள்ளும் மக்களுக்கான AirBnB ஆக மாற்றுவேன் என்று கூறினார்.
அது புத்திசாலித்தனமான முடிவு. எலெக்ட்ரிக்கல், பிளம்பிங், எல்லாமே நான் செட் செட் பண்ணியிருக்கேன். எல்லாவற்றையும் நகர்த்துவதற்கும், அனைத்தையும் பெறுவதற்கும் முதலில் அனுமதிகளை கையில் பெற விரும்புகிறேன் என்றார்.
அவர் இப்போது ஒரு எஸ்டேட் முகவருடன் சேர்ந்து வீடு கட்ட நிலம் வாங்குகிறார். மற்றவர்களின் பணத்தில் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க நான் ஊக்குவிக்க விரும்புகிறேன். என் வயதுடையவர்கள் வீடுகளை வாங்க முடியாது என்று கூறுகின்றனர், ஆனால் அது சாத்தியம் என்பதற்கு நான் ஆதாரம் என்று அவர் மேலும் கூறினார்.
https://twitter.com/rahsh33m/status/1752263704995824005