அடிக்க வந்த குணசேகரனுக்கு கதிர் கற்பித்த பாடம்! பரபரப்பான எதிர்நீச்சல் ப்ரொமோ
எதிர் நீச்சல் சீரியலில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட தர்ஷினியை தேடி வீட்டில் உள்ள பெண்கள் அலைந்து கொண்டிருக்கின்றனர்.
எதிர் நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்தார்.
இதனால் உச்சத்தில் இருந்த சீரியல் தற்போது சுவாரசியம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. அவருக்கு பதிலாக நடிகர் வேல ராமமூர்த்தியை களமிறக்கியுள்ளனர்.
குணசேகரன் மறைவிற்கு பின்பு இறங்கிய டிஆர்பி-யை ஏற்ற பல வழிகளில் சீரியல் குழுவினர் முயற்சித்து வருகின்றனர்.
தற்போது அந்த டிஆர்பி-யை கதிரை வைத்து பிரபல ரிவி அடைந்துவிட்டது என்று தான் கூற வேண்டும். ஏனெனில் கதிர் தனது அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளார்.
கதிர் மட்டுமின்றி ஞானமும் எதிர்த்து நின்ற நிலையில், வீட்டைவிட்டு வெளியேறவும் தயாராக இருக்கின்றனர். இத்தருணத்தில் ஆதிரை அவர்களை அந்த வீட்டில் இருக்க வைத்ததுடன், தனது அண்ணன் குணசேகரனுக்கு எதிராக எரிமலையாய் வெடித்து வருகின்றார்.
குணசேகரன் தர்ஷினி தேடிச்சென்ற வீட்டு பெண்களை காவல்நிலையத்தில் உட்கார வைக்க கூறிய நிலையில், மற்றொரு புறம் ஆதிரையை அடிக்க கை ஓங்கியுள்ளார்.
அப்பொழுது சுதாரித்த கதிர் அண்ணன் குணசேகரனின் கையை எதிர்த்து பிடித்து சரியான பாடம் கற்பித்துள்ளார். வீட்டில் உள்ள குழந்தைகளின் நடிப்பும் வேற லெவல் என்று தான் கூற வேண்டும்.