தஞ்சாவூரில் ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்!
இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது விதியாகும். இருப்பினும் பலரும்ஹெல்மெட் இன்றி பயணித்து வருகின்றனர். இதையடுத்து, அவர்களை பிடித்து போலீஸார் அபராதம் விதித்துவருகின்றனர். மேலும் போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில்பயணிக்க வேண்டும், சீட்பெல்ட் அணிந்து காரில் பயணிக்க வேண்டும் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.
இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஜனவரி 15ம் தேதி முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை தேசிய சாலை பாதுகாப்புமாதம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் ஹெல்மெட் அணிவதன் அவசியம்குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தஞ்சாவூரில் நேற்று திருவள்ளுவர் தினம் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் சுமார் 50 நபர்களுக்கு ஒரு லிட்டர்பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.