கைநிறைய பணம்.. 1, 2 இல்ல மொத்தம் ரூ.81 லட்சம் கோடி லாபம்.. உங்களுக்கு எப்படி..?
வெள்ளிக்கிழமை வர்த்த்க முடிவில் சென்செக்ஸ் 170.12 புள்ளிகள் சரிந்து 72,240.26 புள்ளிகளை தொட்டு உள்ளது, இதேபோல் நிஃப்டி குறியீடு 47.30 புள்ளிகள் சரிந்து 21,731.40 புள்ளிகளை
அடைந்துள்ளது. பங்குச்சந்தையின் கடைசி நாள் வர்த்தக நிலைமையை பாத்தாச்சு, அப்போ வருடம் முழுக்க எப்படியிருந்தது..? 2023 ஆம் ஆண்டு இந்திய பங்குச்சந்தைக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக இருந்தது மட்டும் அல்லாமல் குறுகிய காலத்தில் அதிகப்படியான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மும்பை பங்குச்சந்தை தொடர் வளர்ச்சி மூலம் பல சாதனைகளை எட்டியுள்ளது. சென்செக்ஸ் குறியீடு 2023 இல் 11,399 புள்ளிகள் உயர்ந்து இன்றையவர்த்தகம் முடிவடைந்துள்ளது.
இதேபோல் நிஃப்டி குறியீடு 20% உயர்ந்துள்ளது. பங்குச்சந்தை முதலீட்டாளர்களிக்கு ஸ்மால் கேப்கள் மற்றும் SME பங்குகளில் முதலீட்டை இரட்டிப்பாக்கும் பணியில் பிசியாக இருந்த நிலையில் புளூ சிப் பங்குகள் கணிசமான உயர்வை கொடுத்து ரீடைல் ம முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை கொடுத்துள்ளது. இதன் மூலம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் மொத்த சந்தை மூலதனம் ரூ.81.6 லட்சம் கோடி அதிகரித்து ரூ.364 லட்சம் கோடியாக உள்ளது. சந்தை மூலதன
விரைவில் ஹாங்காங் பங்குசந்தையை ஓரம்கட்டி உலகின் நான்காவது பெரிய பங்குச் சந்தையாக இந்தியா தயாராக உள்ளது. இந்த வருடம் ஸ்மால்கேப் பங்குகள் தான் சூப்பர்ஸ்டார், 1000 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை கொண்ட சுமார் 238 நிறுவனங்கள் சுமார் 2961 சதவீதம் வரையிலான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நிஃப்டி மிட்கேப் 50 சுமார் 50 சதவீத லாபத்தை கொடுத்துள்ளது, இதேபோல் நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 55 சதவீதம் வளர்ச்சிஅடைந்துள்ளது. நிஃப்டியில் அனைத்து துறைவாரியான சந்தைகளும் 2023ல் லாபகரமான நிலையில் முடிந்துள்ளது, இதில் குறிப்பாக NIFTY PSE சுமார் 80 சதவீத லாபத்தை பதிவு செய்துள்ளது, ரியல் எஸ்டேட் குறியீடு 80 சதவீதமும், ஆட்டோமொபைல் துறை 46 சதவீதம் லாபத்தை அள்ளியுள்ளது.