இந்த 5 உணவுகளை அதிகம் சாப்பிடாதீங்க.. இல்லன்னா உங்க குடல் சீக்கிரம் அழுகி போயிடும்…
Gut Health In Tamil: குடல் என்பது வாயில் தொடங்கி, ஆசனவாயில் முடிவடையும் ஒரு நீளமான குழாய் ஆகும். இந்த குடல் தான் செரிமான மண்டலத்தின் மிகவும் முக்கியமான அங்கமாகும்.
நாம் உண்ணும் உணவுகள் இந்த குடல் வழியாகத் தான் உடலினுள் பயணிக்கின்றன.
மேலும் குடல் உண்ணும் உணவுகளை சிறு மூலக்கூறுகளாக உடைத்தெறியவும், உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும் மற்றும் கழிவுப் பொருட்களை நீக்கும் பணியையும் செய்கிறது.
அதோடு இது நோயெதிர்ப்பு மண்டலத்திலும் முக்கிய பங்கை வகிக்கிறது. ஏனெனில் இது சிறப்பான நோயெதிர்ப்பு செல்களைக் கொண்டுள்ளது மற்றும் ஒட்டுமொத்த உடல் மற்றும் குடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்க தேவையான நன்மை விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொண்டுள்ளது. எனவே நாம் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், குடலை நாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயல வேண்டும்.
முக்கியமாக குடல் ஆரோக்கியத்திற்கு உண்ணும் உணவில் முதலில் கவனத்தை செலுத்த வேண்டும். தற்போது நம்மைச் சுற்றி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஏராளமான ஜங்க் உணவுகள் உள்ளன. இது தவிர நாம் உண்ணும் பல உணவுகள் நம் குடலுக்கு தீங்கை விளைவிக்கும்.
இப்படி தீங்கு விளைவிக்கும் உணவுகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், அது நாளடைவில் குடலை மோசமாக சேதப்படுத்தி, புற்றுநோய் போன்ற பல்வேறு மோசமான பிரச்சனைகளை சந்திக்க வைத்துவிடும். இப்போது குடல் ஆரோக்கியத்தை சீரழிக்கும் உணவுகள் எவையென்பதைக் காண்போம்.
சர்க்கரை
நாம் தினமும் குடிக்கும் காபி, டீ மற்றும் பிற உணவுகளில் இனிப்பு சுவைக்காக சேர்க்கப்படும் ஒரு பொதுவான பொருள் தான் சர்க்கரை. இந்த சர்க்கரையை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு வந்தால், அது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழித்துவிடும். அதோடு இது குறிப்பிட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து, நல்ல பாக்டீரியக்களைக் குறைத்து, குடலில் உள்ள பாக்டீரியாக்களில் சமநிலையின்மையை ஏற்படுத்திவிடும்.
செயற்கை சுவையூட்டிகள்
தற்போது பெரும்பாலான உணவுப் பொருட்களில் சுவைக்காக செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. ஆனால் நமது உடலானது செயற்கை பொருட்களை ஜீரணிக்க ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டதல்ல. இந்நிலையில் இப்படிப்பட்ட செயற்கை பொருட்களை ஒருவர் தொடர்ந்து உட்கொள்ளும் போது, அது குடல் ஆரோக்கியத்தில் எதிர்மறை விளைவை ஏற்படுத்தி, குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி, ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தையும் சேதப்படுத்திவிடும்.
எண்ணெயில் பொரித்த உணவுகள்
எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்ள மிகவும் அருமையாக இருக்கும். ஆனால் அந்த வகையான உணவுகளில் ஆரோக்கியமற்ற கொழுப்புக்களான சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் அதிகம் இருக்கும். இந்த வகை கொழுப்புக்கள் குடல் ஆரோக்கியத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.