தொடரும் லொட்டரி சாபம்? சிறுவயதிலிருந்தே காதலித்துவந்த ஜோடி: லொட்டரியில் பரிசு விழுந்தபின் நேர்ந்த துயரம்
சிறுவயதிலிருந்தே காதலித்துவந்த ஒரு ஜோடி, லொட்டரியில் பெருந்தொகை ஒன்று கிடைத்தபின் விரும்பத்தகாத நிகழ்வுகளை சந்தித்த நிலையில், தற்போது அவர்கள் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடரும் லொட்டரி சாபம்?
வறுமை நேரங்களில் கூட இணைந்திருக்கும் பல ஜோடிகள், லொட்டரியில் பெரும் தொகை வென்றபின் பிரிந்துவிடுவதைக் குறித்த பல செய்திகளைத் தொடர்ந்து கேட்டவண்ணம் இருக்கிறோம்.
பிரித்தானியாவிலேயே, அப்படி பிரிந்த பல ஜோடிகள் இருக்கிறார்கள். அவ்வகையில், இளம் வயது முதலே காதலித்துவந்த ஒரு ஜோடி, தற்போது பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
2012ஆம் ஆண்டு, மாற் (Matt Topham, 34) கேஸி (Cassey Carrington, 34) ஜோடிக்கு, லொட்டரியில் 45 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்தது. அதைத்தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.
வெளியாகியுள்ள சோக செய்தி
இந்நிலையில், நேற்று முன் தினம் ஊடகவியலாளர்கள் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த கேஸி, தாங்கள் பிரிந்துவிட்டதாக கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், மாற், தனது விலையுயர்ந்த கார் மற்றும் படகில் Amy Cox என்னும் பெண்ணுடன் சுற்றும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
காரணம் என்ன?
எதனால் மாற்றும் கேஸியும் பிரிந்தார்கள் என்ற கேள்விக்கு, மாற் இங்கே என்னுடன் வாழவில்லை என்று மட்டுமே பதிலளித்தார் கேஸி.
ஆகவே, அந்த அழகான காதல் ஜோடி எதனால் பிரிந்தது என்பது தெரியவில்லை.
இதற்கிடையில், மாற்றைக் குறித்த மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, 2021ஆம் ஆண்டு, மாற் பயணம் செய்த கார் ஒன்று மற்றொரு காருடன் மோதியதில், அந்தக் காரில் பயணித்த Mary Regler (75) என்னும் பெண்மணி உயிரிழந்தார். அவரது கணவர் படுகாயமடைந்தார்.
தன் மனைவி கொல்லப்பட்டதால் கடுமையான அதிர்ச்சிக்குள்ளாகியிருந்த அவரது கணவர், தான் மாற்றை மன்னிக்கவேமாட்டேன் என்று கூறியிருந்தார்.
மாற் தன் மீதான தவறை உடனடியாக ஒப்புக்கொண்டதால், அவருக்கு கடுமையான தண்டனைக்குப் பதிலாக, 16 வாரங்கள் suspended jail sentence என்னும் தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டது.
ஆக மொத்தத்தில், பெரும் தொகை லொட்டரியில் பரிசாக கிடைத்தும், அந்த ஜோடி நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழவில்லை. இது தொடரும் லொட்டரி சாபம் என்றே விமர்சிக்கின்றன பிரித்தானிய ஊடகங்கள்!